Pages

Thursday, November 7, 2013

Alaguraja Movie Review:

அழகுராஜா சினிமா விமர்சனம்:

அழகுராஜா கார்த்தி. தான் நடத்தும் லோகல் கேபிள் சேனலை நம்பர் ஒன் சேனல் ஆக்கிய பின்புதான் கல்யாணம் என கண்ட கண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் தன் சேனலில் ஒலி, ஒளிபரப்பி வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து வருபவர் கார்த்தி. அவர் தன் நண்பர் கல்யாணம் என்னும் சந்தானத்தின் காதர்பாய் பிரியாணி ஆசைக்காக, ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போகிறார். போன இடத்தில் அந்த மண்டபத்தில் நடக்கும் லைட் மியூசிக்கில் தப்பும் தவறுமாக பாடும் கொப்பும் குலையுமான சித்ராதேவிபிரியா என்னும் காஜல் அகர்வால் மீது காதல் வயப்படுகிறார். தனக்கு பாட்டு சரவரவில்லை என்றால் பரதம் என்று கலைத்துறையில் ஏதாவது சாதித்த பின்புதான் திருமணம் என கார்த்தி மாதிரியே விரதமிருக்கும் காஜல். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப பாட்டும் வராமல் ஆட்டமும் சரிவராமல் கார்த்தியின் காதலுக்கு இல்லை இல்லை.. கடலைக்கு சற்றே மனம் இறங்குகிறார், இளகுகிறார். ஆனால், இந்த சமயத்தில் கார்த்தியின் அப்பா பிரபு இவர்களது காதலுக்கு தடை போடுகிறார். காரணம் பிரபுவின் பிளாஷ்பேக் காதல்! காஜலின் தாத்தா ராமசாமி என்னும் நாசரிடம் டிரைவராக வேலைபார்க்கும் பிரபுவுக்கு நாசரின் மகள் மீனாட்சி என்னும் ராதிகா ஆப்தே மீது காதல்! அந்த காதல் நாசருக்கு தெரிய வருவதற்கு முன்பே நாசரிடம் பிரபுவை (பிரபுவின் இளவயதிலும் கார்த்தியே நடித்திருப்பது மட்டுமே இம்மாம்பெரிய படத்தில் புதுமை, பொருத்தம்!) வேலைக்கு சேர்த்துவிட்ட கல்யாணம் சந்தானத்தின் அப்பா காளி சந்தானம் பிரபுவை (அதாங்க கார்த்தியை) வேறு ஒரு மேட்டரில் சிக்கவைத்து வேலையை விட்டு தூக்குகிறார். அதனால் பிரபு-ராதிகா ஆப்தேவின் காதல் பணால் ஆகிறது. அந்த கடுப்பில் கார்த்தியின் காஜல் மீதான காதலுக்கு நோ சொல்கிறார் பிரபு. அப்பா சந்தானம் செய்த தப்புக்கு பிள்ளை சந்தானம் பிராயச்சித்தம் தேடி பிரபுவின் சம்மதத்துடன் கார்த்தி-காஜலின் காதலை சேர்த்து வைக்க, ஆல் இன் ஆல் அழகுராஜா இனிதே முடிகிறது! இனிதேவா.?!

ஏதோ டாப்-10, படவரிசை பத்து, நகைச்சுவை கலாட்டா உள்ளிட்ட சின்னத்திரை டிராமா மாதிரியான கதையை துணிச்சலாக படமாக எடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-ஐ பாராட்டியே ஆகவேண்டும்! அதில் துணிச்சலாக நடிக்கவந்த கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, நாசர், சரண்யா, வி.எஸ்.ராகவன், ராதிகா ஆப்தே, கோட்டா சீனிவாசராவ், ஆடுகளம் நரேன், ரஞ்சனி உள்ளிட்டவர்களுக்கு அபார துணிச்சல்தான்.

இந்த காமெடி டிராமாவுக்கும் பேமிலி டிராமாவுக்கும் இசையமைத்திருக்கும் எஸ்.தமன், ஒளிப்பதிவு செய்திருக்கும் சக்திசரவணன் உள்ளிட்ட எல்லோருக்கும் இப்படத்தை எழுதி, இயக்கி இருக்கும் ராஜேஷ்.எம் மாதிரியே ரொம்பவே துணிச்சல்! இதை படமாக தயாரித்திருக்கும் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு துணிச்சலோ துணிச்சல்! ஆனால் அந்த துணிச்சல், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இருக்காது என்பதுதான் படக்குழுவினருக்கு எரிச்சல்! ஆக மொத்தத்தில் ப்ளாஷ்பேக்கில் பிரபுவாக நடிக்கும் கார்த்தி போர்ஷனை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆல் இன் ஆல் அழகுராஜா - அல்வாராஜா! ராஜேஷ்.எம்-க்கு சரக்கு தீர்ந்துபோச்சா...?


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி




2 comments:

Hariharan said...

ராஜேஷுக்கு எங்கங்க சரக்கு இருந்துச்சு... சந்தனத்தோட சரக்க நம்பித்தான் இவரே இருந்தாரு...

Unknown said...

செம மொக்க மச்சி முடியல .. இத பாத்த பிண்ணாடி நையன்டியே தேவல மச்சி