Pages

Sunday, November 17, 2013

பீட்சா 2 வில்லா விமர்சனம்

பீட்சா 2 வில்லா  விமர்சனம்:

நடிகர்கள்

அசோக் செல்வன்
சஞ்சிதா ஷெட்டி
இயக்கம் :தீபன் சக்கரவர்த்தி
இசை :சந்தோஷ் நாராயணன்
ஒளிபதிவு :தீபக் குமார்

சமீப திரைப்படங்களில்  இது திகில் படம் என்றாலும்  ரத்தம் மற்றும் வன்முறை இல்லாத படம் கொடுத்த வகையில் நிச்சயம்  பாராட்ட வேண்டும்

ஹீரோ ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர். அவரோட அப்பா ஒரு ஓவியர். சில பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாம் வரைஞ்சு ஒரு வீட்டுல வெச்சிருக்கார். அந்த ஓவியங்கள்ல எதிர் காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை விவரிப்பது போல் சில கலெக்ஷன்ஸ் இருக்கு. ஹீரோவோட அம்மா விபத்தில் இறப்பது போல் ஒரு ஓவியம். அந்த ஓவியம் வரைஞ்ச அடுத்த வருசம் அம்மா டெட். ஹீரோ நாவல் எழுதுனதுக்காக அவார்டு வாங்குவது போல் ஒரு ஓவியம் அதே போல் ஹீரோ அவார்டு வாங்கறார்.

இந்த மாதிரி சில சம்பவங்கள் ஓவியங்கள்ல இருப்பது போலவே ஹீரோ வாழ்க்கைல நடக்குது. ஹீரோவோட அப்பா பிஸ்னெஸ்ல லாஸ் ஆகி கோமா ஸ்டேஜ்ல படுத்து செத்துடறாரு. ஹீரோவுக்கு தற்செயலாக வில்லா அப்டிங்கற வீட்டைப்பத்தி தகவல் கிடைக்குது. அது அவரோட அப்பா வாங்குன வீடுதான், ஆனா ஏதோ சில காரணங்களுக்காக அந்த வீட்டைப்பற்றின தகவல்களை மறைச்சுட்டாரு . அந்த வீட்டில் இதுக்கு முன்னால வாழ்ந்தவங்கள்ல ஒரு ஆள் ஒரு குழந்தையை நர பலி கொடுத்திருக்காரு. அதனால கூட இருக்கலாம்னு ஹீரோ நினைக்கறாரு.

ஹீரோவோட அப்பா வரைஞ்ச ஓவியக்கலெக்ஷன்ல ஹீரோ சாவது போலவும், ஹீரோவோட லவ்வரை ஹீரோவே கொலை செய்வது போலவும் இருக்கு. ஹீரோ அதைத்தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றியா? தோல்வியா? என்பது க்ளைமாக்ஸ்.

விஜய் சேதுபதி ஹீரோவா நடிச்ச பீட்சா செம ஹிட் ஆனதால், அதே ஃபார்முலாவில் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவுக்கு மாறுதலான த்ரில்லர் கதை கொண்ட படம். ஹீரோவா அசோக் செல்வன். கச்சிதமான நடிப்பு. அவர் ஏன் படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வர்றார்னு தெரியலை. அப்பப்ப ஜாலியா இருப்பது மாதிரி காட்டி இருக்கலாம்.

ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி. ஹீரோவை விட அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர் . இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம். நாசர் ஹீரோவுக்கு அப்பா கேரக்டர். ஆனா அதிக வாய்ப்பில்லை. பின்னணி இசை பிரமாதம்

படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களுக்கு திக் திக் என வரவழைக்க காரணம் சந்தோஷ் நாராயணன் இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும்தான்.

பீட்சா பாணியில் திகிலாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீபன்.

மொத்தத்தில் 'பீட்சா 2 வில்லா' திகிலூட்டும் தீனி.

மொத்தத்தில் இந்த படம் A  சென்டர்களுக்கான  படம் Bமற்றும் C   சென்டர்களிலும்  படம் ஓடும் என்றாலும் பெரிய வசூல் எதிர் பார்க்ககூடாது  என்பதுதான் உண்மை .



இது என்னுடைய பார்வையில் மட்டுமே எனவே உங்களின் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

என்றும் நேசமுடன் ,
பாலசுப்ரமணியன்.சி
கோயம்புத்தூர் .

                                    இந்த நாள் இனிய நாள் .




















 

No comments: