Pages

Thursday, March 30, 2017

காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு

சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பதிவிடுகிறேன்
   காரிமங்கலம் நகரை பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தாலும் இந்தமுறை பூர்விக வரலாற்றை பதிகிறேன்.
   இது என்னோட சொந்த பதிவு இல்லை, இணையத்தில் இருந்து பெற்றது.

காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு:
காரிமங்கலம் எனும்பெயர் தகடூர் ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் காரி(மலையமான் திருமுடிக்காரி) என்னும் அரசன் படை நிறுத்திய இடம் பிற்காலத்தில் காரிமங்கலம் எனப் பெயர்க் கொள்ளலாயிற்று என்பர். மங்கலம்,பாடி போன்ற சொற்கள் படைநிறுத்திய இடங்களைக் குறிப்பதாகும்.
இவ்வூர் தகடூர் நாட்டின் ஒரு உட்பிரிவு நாடான கோவூர் நாட்டில் அடங்கிய ஒரு பகுதி
இவ்வூர்ப் பழம்பெருமையைச் சொல்லும் கல்வெட்டுகள் இவ்வூரை “கோவூர் நாட்டு காரிமங்கலத்து” எனக் குறிக்கின்றன.
சிந்தல்பாடியில் இருக்கும் நடுகல்லொன்றில் கோவூர் நாட்டு காரிமங்கலங் “கங்கஅதி அரைசரசரோடு தொறுக்கொள்ள” (ஆநிரை கவர்தல்) நடைபெற்ற போரில் வீரனொருவன் இறந்ததைக் குறிக்கிறது. 
இந்த நடுகல் காலம் 6-ம் நூற்றாண்டு, பல்லவ மகேந்திரவர்மர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததையும் குறிக்கிறது.
அதேபோல கதிரம்பட்டி நடுகல்லும் கோவூர்நாட்டு காரிமங்கலத்து குளவர் மக்கள் வீரர் இருவர் தொறுக் கொள்ளலில் இறந்த செய்தியைக் குறிக்கிறது. இந்நடுகல் இரண்டாம் மகேந்திரன் ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும்
தகடூர் அதியமான் காலம் கிபி ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஆயிரத்தென்னூறு ஆண்டுகளாக “காரிமங்கலம்” எனும் பெயர் மாறாமல் கொண்டுள்ள ஊர் இது என்பது பெருமை கொள்ளத்தக்கது.
குலோத்துங்க சோழனால் காரிமங்கலம் ஒட்டிய சிறு குன்றில் எடுக்கப்பட்ட “ஆரண்யேஸ்வரர் கோவிலும், பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆட்சியாளர் ஒருவராகிய ராமசாமிக் கவுண்டர் என்பவரின் ஜீவசமாதிக் கோவில்,திரௌபதியம்மன் கோவில் மற்றும் சிறு தெய்வக்கோவில்களும் இதன் சிறப்பு.
ஊருக்கு மேற்கே கோட்டைமேடு எனப்படும் இடம் இன்று புளியந்தோப்பாகவும் அங்கிருந்து தென்மேற்காக செல்லும் “தண்டு ஓணி” என சொல்லப்படும் பாதையும் உள்ளது.

ஓணி-மழைக்காலத்தில் நீர்செல்லும் ஓடையாகவும் வெயிற்காலத்தில் வண்டிகள் கால்நடைகள் செல்லும் நிலவழியாகவும் பயன்படுத்தப்படும்


பாலசுப்ரமணியன்.சி 
காரிமங்கலம் வட்டம்& அஞ்சல்  
தர்மபுரி மாவட்டம்