Pages

Sunday, October 1, 2017

என்னுடைய பார்வையில் கருப்பன் படம்

என்னுடைய பார்வையில் கருப்பன் படம் 

நடிகர்கள் 
விஜய் சேதுபதி -கருப்பன் 
தான்யா ரவிச்சந்திரன் - அன்பு 
பாபி சிம்ஹா - கதிர் 
பசுபதி - மாயி 
சிங்கம் புலி-கருப்பனின் மாமா , மற்றும் பலர் 
இயக்குனர் : ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் 

விஜய் சேதுபதி படம் என்றாலே வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும் அதே ஆவலில் இந்த படத்தை ஈரோடு மகாராஜா திரையரங்கில் நண்பர் கல்யாண சுந்தரத்துடன் பார்க்க சென்றேன் 

சரி கதைக்கு வருவோம் , ஜல்லிக்கட்டு  மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை.
    வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் பாத்திரங்கள்தான்  தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு வம்பிழுப்பவர்களை அடித்துத் துவம்சம் செய்வதும் அருமையாக உள்ளது. பெரிய மீசையோடு கிராமாத்தானாக வரும் விஜய் சேதுபதி ரசிகர்களைக் கவர்வது உறுதி. சக்திவேலின்  ஒளிப்பதிவு சூப்பர் 

பாபி சிம்ஹா படத்தில் வழக்கமான வில்லன்  கதாபாத்திரம். கிட்டத்தட்ட கதையும் அவ்வாறே பயணிக்கிறது. ஆனால், இப்படம் சுபம் என்பதுதான் வித்தியாசம். இறைவி போல் குழப்பமான காதாபாத்திரம் இல்லாததால், வில்லத்தனத்தை முழு வீச்சில் காட்டக் கிடைத்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். 
விஜய் சேதுபதி மாடு அணையும் காட்சிகளை இமானின் பின்னணி இசையோடு பார்க்க அசத்தலாய் உள்ளது. விஜய் சேதுபதியின் ரொமான்ஸ் திகட்டுமளவு தூக்கலாய் உள்ளது. அவர் பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கிறது. அவருக்கு ஈடு கொடுத்து செமயாக நடித்துள்ளார் தான்யா. படத்தின் அத்தனை கதாப்பாத்திரங்களுமே மிக இயல்பான குணாதிசயத்தோடு இருப்பது சிறப்பு. மாயியாக நடித்துள்ள பசுபதி, வில்லன் கதிராக வரும் பாபி சிம்ஹா, அவருக்குத் துணை புரிய ஒத்தோதும் தவசி என கதாபாத்திர தேர்விலேயே இயக்குநர் பன்னீர் செல்வம் வாகை சூடி விடுகிறார்
           படத்தில் அங்கங்கே நாட்டுப்புற கலைகளை தூக்கி நிறுத்தி இருப்பதும், போகிறபோக்கில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்  பற்றி சிங்கம்புலி வசனம் அருமை  , குடியால் குடும்பம் கெடும் என்ற செய்திகளை சொன்னதுக்கு இயக்குனருக்கு 
      வழக்கமான பழைய திரைக்கதைதான் , ஆனாலும் விஜய் சேதுபதி நடிப்பில் பார்க்கும் போது படம் மாஸ்டர் பீஸ்தான்.
     நிச்சயமாக கொடுத்த காசுக்கு ஒர்த்தான படம்தான் 

நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி 
காரிமங்கலம் வட்டம்&அஞ்சல் 
தருமபுரி மாவட்டம் 
+919965818701


































































Thursday, July 27, 2017

விக்ரம் வேதா ஒரு பார்வை :-


                                     



ஓரம் போ  மற்றும் வ குவாட்டர் கட்டிங் போன்ற மொக்க படங்களாக கொடுத்த புஷ்கர்- காயத்திரி இருவரும் இணைந்து கணவன் மனைவி இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படம்தான் விக்ரம் வேதா .

   நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய சொந்த ஊரான காரிமங்கலம் நகரில் ராமயா சினிமாவில் இந்த படத்தை பார்த்தேன் , இப்பொழுது இந்த ரம்யா திரையரங்கம் சிறப்பான இருக்கை  வசதிகளுடன் உள்ளது .

படத்திற்கு வருவோம்

விக்ரம் - மேடி  ( மாதவன் )
வேதா - விஜய் சேதுபதி
மற்றும் வரலக்ஷ்மி , ஷ்ரத்தா  
           
போலீஸ் டிரஸ் இல்லாத மாதவனும் ' 16 கொலை செய்த விஜய் சேதுபதியின் தெனாவட்டான நடிப்பும் படத்தின் ஆக சிறந்த பலம் . அதுவும் விஜய் சேதுபதி வாய்ஸ் மாடுலேஷன் இல் சார் ஒரு கத சொல்லட்டுமா என்று ஆரம்பிப்பது செம்ம கெத்து ,
 
      படத்தின் தலைப்பு குறிப்பிடுவதைப் போல, விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான் படம். விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது தோளில் சுமந்துகொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு புதிர் கதையைச் சொல்லி, அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.   
 
  இங்கு ,
 
வேதாளம் - விஜய் சேதுபதி , விக்ரமாதித்தன் - மாதவன் ,
 
விக்ரம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கொடுங்குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் ஒரு காவல்துறை அணியில் இருக்கிறார். வேதா என்ற 14 கொலைகளைச் செய்த கேங்ஸ்டரை சுட்டுத்தள்ள முடிவுசெய்கிறது அந்த அணி. இந்த நிலையில் தானே முன்வந்து சரணடையும் வேதா, ஜாமீன் பெற்று வெளியேறுகிறான்.
 
வேதா தானாக முன்வந்து சரணடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலைத் தேட ஆரம்பிக்கிறான் விக்ரம். இப்படி பல முறை விக்ரமின் கையில் சிக்கும் வேதா ஒவ்வொரு முறையும் ஒரு புதிரை முன்வைக்கிறார். அந்தப் புதிருக்கான விடையை அடையும்போது, வேறு ஒரு புதிர்
 
சாதாரண த்ரில்லர்தான். ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி VS குற்றக்கும்பல் தலைவன் என்று மிகச் சாதாரணமாகத்தான் துவங்குகிறது படம். ஆனால், சற்று அவசரப்படாமல் கவனித்தால் பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கிறது இந்தப் படம். கடைசிக் காட்சி வரைக்கும் இந்த ஆச்சரியத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.
 
படத்தின் துவக்கத்தில் விக்ரம், ஓடாமல் இருக்கும் ஒரு பழைய புல்லட் வாகனத்தை சரி செய்ய ஆரம்பிக்கிறார். படம் நெடுக உதிரி பாகங்களுக்காக அலைகிறார். ஒவ்வொரு பாகமாகக் கிடைக்கிறது. புல்லட் முழுவதுமாக தயாராகும்போது, படம் உச்சகட்டத்தை எட்டுகிறது. இது போன்ற ரசிக்கத்தக்க காட்சிகள் படம் நெடுக இருக்கின்றன.
 
எப்போதுமே நீதியின் பக்கம் நிற்கும் விக்ரமே கதையின் நாயகனைப்போலத் தோன்றினாலும், படம் நகர நகர படத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது வேதாவின் பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய் சேதுபதி. கையில் ஒரு வடையை வைத்தபடி மிக சாவதானமாக காவல்துறையிடம் சரணடையும் துவக்கக் காட்சியிலேயே படத்தின் கவனத்தை அவர் மீது திருப்பிவிடுகிறார். எங்கேயுமே உறுத்தலில்லாத, மிகை நடிப்பில்லாத விஜய் சேதுபதி ஆக பெரிய பலம் .
 
பெண் பாத்திரங்களாக வரும் ஷ்ரத்தா, வரலட்சுமி ஆகியோரின் பாத்திரங்கள் சவாலானவையல்ல. தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். திரைக்கதைக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தின் மிக முக்கியமான பலங்கள், ஒளிப்பதிவும் பின்னணி இசையும். சற்றே இருண்மை படிந்த இந்தக் கதைக்கு உரிய நியாயத்தைச் செய்கிறது வினோத்தின் ஒளிப்பதிவு. அதேபோல சாமின் பின்னணி இசை, படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்துகிறது.
 
அதுவும் படத்தில் புரோட்டா எப்படி சாப்பிடுவது என்று கிளாஸ் எடுக்கும் வேதா செம்ம , படம் பார்த்தவர்கள் இனிமே புரோட்டா சாப்பிடும் பொது நிச்சயமாக விஜய் சேதுபதியின் நினைவு வரும் . படத்தின் வசனங்கள் பெரிய பலம் .
 
 
வித்தியாசமான கதை  மீது நம்பிக்கை வைத்து  ரசிகர்களை நம்பி எடுத்த புஷ்கர் காயத்திரி தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 
 
   ஜி எஸ் டி  பிரச்சினையில் தியேட்டர்  நிறைகிறது என்றால் அது விஜய் சேதுபதி மேஜிக்  தான் முழு முதல் காரணமாக இருக்கும் 
 
 

நன்றிகளுடன்,

பாலசுப்ரமணியன்.சி 

காரிமங்கலம் 

தர்மபுரி - 635111

+91 9965818701

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thursday, March 30, 2017

காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு

சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பதிவிடுகிறேன்
   காரிமங்கலம் நகரை பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தாலும் இந்தமுறை பூர்விக வரலாற்றை பதிகிறேன்.
   இது என்னோட சொந்த பதிவு இல்லை, இணையத்தில் இருந்து பெற்றது.

காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு:
காரிமங்கலம் எனும்பெயர் தகடூர் ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் காரி(மலையமான் திருமுடிக்காரி) என்னும் அரசன் படை நிறுத்திய இடம் பிற்காலத்தில் காரிமங்கலம் எனப் பெயர்க் கொள்ளலாயிற்று என்பர். மங்கலம்,பாடி போன்ற சொற்கள் படைநிறுத்திய இடங்களைக் குறிப்பதாகும்.
இவ்வூர் தகடூர் நாட்டின் ஒரு உட்பிரிவு நாடான கோவூர் நாட்டில் அடங்கிய ஒரு பகுதி
இவ்வூர்ப் பழம்பெருமையைச் சொல்லும் கல்வெட்டுகள் இவ்வூரை “கோவூர் நாட்டு காரிமங்கலத்து” எனக் குறிக்கின்றன.
சிந்தல்பாடியில் இருக்கும் நடுகல்லொன்றில் கோவூர் நாட்டு காரிமங்கலங் “கங்கஅதி அரைசரசரோடு தொறுக்கொள்ள” (ஆநிரை கவர்தல்) நடைபெற்ற போரில் வீரனொருவன் இறந்ததைக் குறிக்கிறது. 
இந்த நடுகல் காலம் 6-ம் நூற்றாண்டு, பல்லவ மகேந்திரவர்மர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததையும் குறிக்கிறது.
அதேபோல கதிரம்பட்டி நடுகல்லும் கோவூர்நாட்டு காரிமங்கலத்து குளவர் மக்கள் வீரர் இருவர் தொறுக் கொள்ளலில் இறந்த செய்தியைக் குறிக்கிறது. இந்நடுகல் இரண்டாம் மகேந்திரன் ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும்
தகடூர் அதியமான் காலம் கிபி ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஆயிரத்தென்னூறு ஆண்டுகளாக “காரிமங்கலம்” எனும் பெயர் மாறாமல் கொண்டுள்ள ஊர் இது என்பது பெருமை கொள்ளத்தக்கது.
குலோத்துங்க சோழனால் காரிமங்கலம் ஒட்டிய சிறு குன்றில் எடுக்கப்பட்ட “ஆரண்யேஸ்வரர் கோவிலும், பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆட்சியாளர் ஒருவராகிய ராமசாமிக் கவுண்டர் என்பவரின் ஜீவசமாதிக் கோவில்,திரௌபதியம்மன் கோவில் மற்றும் சிறு தெய்வக்கோவில்களும் இதன் சிறப்பு.
ஊருக்கு மேற்கே கோட்டைமேடு எனப்படும் இடம் இன்று புளியந்தோப்பாகவும் அங்கிருந்து தென்மேற்காக செல்லும் “தண்டு ஓணி” என சொல்லப்படும் பாதையும் உள்ளது.

ஓணி-மழைக்காலத்தில் நீர்செல்லும் ஓடையாகவும் வெயிற்காலத்தில் வண்டிகள் கால்நடைகள் செல்லும் நிலவழியாகவும் பயன்படுத்தப்படும்


பாலசுப்ரமணியன்.சி 
காரிமங்கலம் வட்டம்& அஞ்சல்  
தர்மபுரி மாவட்டம்