Pages

Saturday, March 29, 2014

என்னுடைய பார்வையில் குக்கூ படம்

என்னுடைய பார்வையில் குக்கூ  படம்

 ஆனந்த விகடன் புத்தகத்தில் டைரக்டர் ராஜு முருகன் வட்டியும் முதலும் தொடர் என் மனதின் மிக நெருக்கமான தொடர் அது என்னுடைய பள்ளி நாட்களையும் கிராம வாழ்கையும் நினைவு படுத்திய தொடர்  அந்த தொடர் முடியும் பொது ராஜு முருகன் நான் ஒரு படத்தை இயக்க இருப்பதால் இந்த தொடர் முடிவதாக எழுதி இருந்தார் அப்போதே படத்தின் தலைப்பையும் கூறி இருந்தார்

  நான் இந்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்தாலும் முதல் வாரம் பார்க்கவில்லை என் அறை  நண்பர் ராஜு அழைத்த காரனத்தால் உடனடியாக  இரவு காட்சி காண கோவை செந்தில் குமரன் சென்றோம் அனால் டிக்கெட் இல்லை பின்னர் பத்து நிமிட தாமதத்தில் கங்கா காம்ப்ளெக்ஸ் அரங்கில் படத்தை பார்த்தோம்  ஆனாலும் முதல் 5 நிமிட படத்தை பார்க்க முடியவில்லை

சரி படத்திற்கு வருவோம் ,


நாயகனும் நாயகியும் மாற்றுத் திறனாளிகள். இருவரும் அதனை வைத்து பிழைக்க நினைக்காமல் உழைத்து பிழைக்கிறார்கள். அவர்கள் சார்உலகில் மகிழ்வுடன் பயணிக்கிறார்கள்.

சில அலைவரிசை புரிதல்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். பார்வையற்ற நாயகியின் பணத்தாசை பிடித்த அண்ணனின் கட்டாயத்தினாலும் வாழ்வின் சூழலினாலும் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா என்பதே  படம் .
 
நாயகனாக தினேஷ், முதல் படத்தைப் போலவே பர்பார்மன்ஸில் அசத்தியிருக்கிறார். கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும்.

நாயகியாக மாளவிகா, நல்ல நடிப்பு, இயல்பான அழகு, தெறிக்கும் எக்ஸ்பிரசன் என பட்டையை கிளப்புகிறார். நமக்கு பேரழகிகளை விட பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றம் தான் பிடிக்கும். அதனாலேயே இவர் இன்னும் கவனிக்கப்படுவார்.
 
படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பங்களிப்பை வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த எம்ஜியார் நடிகர், குபேரன் சந்திரபாபு, இளையராஜா காதல் சோக பாடல்களுக்கு பணம் தந்து ரசிக்கும் நபர், பிஎம், ரயிலில் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் பயணம் செய்யும் நபர் என ஒவ்வொருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்காக போலி பொதுச்சேவை செய்யும் நபர்களை ஒரு காட்சியில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கிறார் இயக்குனர். அந்த ஒரு காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

போகிற போக்கில் நம் நடிகர்களையும் இன்றய அரசியல்  அழகா விமர்சிப்பது மிக அழகு 
 
  படத்தில் கண் பார்வை இல்லாத தினேஷ் இடம் நண்பர்கள் 2 லச்ச ரூபாய் தந்து அனுப்புவது நம்பும் படி இல்லை , மேலும் தேர்தல் காலங்களில் சோதனை என்ற பெயரில் மக்களை  வஞ்சிக்கும் போலீஸ் அதிகாரிகளை ராஜு முருகன்  தோலுரித்து காட்டி இருக்கிறார் 
 

சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.

அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்..., இருட்டில் கிடைத்த சுதந்திரம்..., தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு ஷொட்டு
 
 பாடல்கள் தேன் என கூறினால் அது ஒன்றும் மிகை இல்லை , ஆனாலும் கிளைமாக்ஸ் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக  இருந்திருக்கும் , தரமான படம் வழக்கமான கிளைமாக்ஸ் ,
 
 
 
 
இது  தாமதமான விமர்சனம் , அடுத்த முறை மிக விரைவில் சந்திக்கும் வரை 
 
நன்றிகளுடன் ,
பாலசுப்ரமணியன்.சி 
கோயம்புத்தூர் .
9965818701.
 















 

Friday, March 28, 2014

குக்கூ. படத்தை பற்றி

குக்கூ. படத்தை பற்றி ,

                             இந்த படத்தை ரிலீஸ் ஆன உடனே பார்த்து விட வேண்டும் என எண்ணி இருந்தேன் ஆனாலும் வேலை பளு காரணமாக படத்தை பார்க்க முடியவில்லை , நான் ராஜு முருகனின் வட்டியும் முதலும் தொடரின் மிக பெரிய அடிமை , ஆனந்த விகடனில் அது தொடராக வெளி வந்த போது ஒரு வாரம் கூட  விடாமல் படித்தவன்  அதனால் தான் அந்த அளவுக்கு ஆர்வம்

தாமதம் என்றாலும் இன்று இரவுக்குள் படத்தின் விமர்சனத்தை இங்கு பதிவிடுகிறேன்


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன் .சி
கோயம்புத்தூர்
+91 9965818701.

Wednesday, March 12, 2014

நிமிர்ந்து நில் சினிமா விமர்சனம் - என் பார்வையில்

நிமிர்ந்து நில்  சினிமா விமர்சனம் - என்  பார்வையில்,

   மிக நீண்ட நீண்ட இடைவெளிக்கு பிறகு பட விமர்சனம் எழுதுகிறேன் ,சமீபத்தில் முக்கிய படங்கள் எதுவும் வரவில்லை விஜய் சேதுபதி படமும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் விமர்சனம் எழுதவில்லை ,

சமுதிரகனியின் படம் என்றாலே நிச்சயம் சமூக விழிப்புணர்வு இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும், மேலும் சமீபத்தில் அவர் படம் சாட்டை என்ற படத்தில் இடம் பெற்ற வசங்கள் மிகபெரிய வரவேற்ப்பை பெற்றன. எனவே இந்த் படத்திற்கும் வசனங்கள் மீது பெரிய எதிபார்ப்பு எனக்கு இருந்தது.

ஜெயம் ரவிக்கும் சமீபத்தில் எந்த ஹிட் படமும் இல்லை மேலும் படம் வெள்ளியன்று வெளியாகும் என்று கூறினார்கள், அனால் வரவில்லை சனிகிழமை அன்று வெளியான உடனே பார்க்க வேண்டும் என நினைத்தேன் அனால் முடியவில்லை நண்பர்களுடன் நேற்றுதான் பார்த்தேன்.

நான்  இந்த படத்தை  கோவை  செந்தில் குமரன் அ.ரங்கில் என் அறை தோழர் மற்றும் இன்னும் சில நண்பர்களுடன் அமர்ந்தேன்

சரி கதைக்கு வருவோம்,

நேர்மையாக வாழ நினைக்கும் பொறியியல் பட்டதாரியான ஜெயம் ரவி ஒரு நாள் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது போக்குவரத்து காவலரால் உண்டாகும் சின்ன பிரச்சனையால் உண்டான கோபம் அது எங்கு போய்  முடிகிறது என்பதுதான் படம்.
நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது. இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்.

ஜெயம் ரவியால் பதிக்கப்பட்ட  போலீஸ் மற்றும் ஜட்ஜ் இருவரும் ஜெயம் ரவியை போலீஸ் கொண்டு சாகும் அளவுக்கு அடிக்கிறார்கள்  இதனால் பொங்கி எழும் ஜெயம் ரவி இவர்கள் அனைவரும் பழி வாங்க இல்லாத ஒரு ஆள் பெயரில் பாஸ்போர்ட் driving licence , voter id மற்றும் death certificate போன்ற அனைத்தும் பெறுகிறார் இதன் மூலம் மொத்தம் 147 பேர் மாட்டுகிறார்கள் இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்  ஜெயம் ரவி

இடைவேளை வரை மாட்டிய  அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள் , இடைவேளை வரை வேகமாக செல்லும் படம் பின்னர் சற்று தடுமாறுகிறது என்பதே உண்மை.

அமலபாலுக்கு இந்த படத்தை பொறுத்தவரை பெரிய  வேலை இல்லை அவர் பாத்திரம் இல்லாவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது.நாயகனின் நண்பனாக சூரி நிறைவாக வந்து காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக செய்து போகிறார். கோபிநாத்தும் படத்தில் இருக்கிறார்.

பாடல்களை பொறுத்தவரை படத்தில் எதற்கு என்றே தெரியவில்லை , சரத்குமார் CBI அதிகாரியாக 10 நிமிடம் வந்து செல்கிறார்,.

இடைவேளைக்கு பின் வரும் ஆந்தர  ஜெய் சிம்ம ரெட்டியாக  இன்னொரு பாத்திரத்திலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஜெயம் ரவி. அவரை  இறுதியில் கொலை செய்வது ஏன் என்று தெரியவில்லை.

ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.

ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.

லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது. ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது அனால் சற்று தடம் புரண்டுவிட்டது 
 
ஆனாலும் படம் பார்க்கும் பொது அந்நியன்  மற்றும் சாமுராய் போன்ற படங்களின் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை 
 
ஆனாலும் படத்தை ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்