Pages

Wednesday, January 29, 2014

என்னுடைய பார்வையில் கோலி சோடா பட விமர்சனம்

என்னுடைய பார்வையில் கோலி சோடா பட விமர்சனம் ,

இந்த படத்தை பற்றி நல்ல படம் என்று நான் கேள்வி பட்டும் படத்தை ஒரு வார தாமதத்திற்கு பிறகு கோவை கங்கா திரை அரங்கில் பார்த்தேன் என்  அறை நண்பர் ராஜீவ் படத்தை பார்க்க என்னுடன் மூன்றாவது முறையாக வந்ததால் எனக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது

சரி  படத்திற்கு வருவோம் .

படத்தில் நடித்து இருப்பவர்கள் பசங்க படத்தில் பள்ளி சிறுவர்களாக நடித்த கிஷோர் ,பாண்டி மற்றும் ஸ்ரீராம் போன்றவர்களே இந்த படத்தில் வளர்ந்த வாலிப சிறுவர்களாக

தங்களக்கு என்று எந்த அடையாளம் இல்லாத கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கி பிழைக்கும் சிறுவர்கள் பின்னர் ஒரு தங்கலுய்க்கன அடையாளத்தை அடையும் போது அந்த அடையாளத்தை அழிக்கும்  வில்லன் கூட்டமும் மீண்டும் தங்கள் அடையாளங்களை அந்த சிறுவர்கள் அடைந்தார்களா  என்பது தான் படம்

ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி - கிஷோர், சித்தப்பா - பாண்டி, குட்டிமணி - முருகேஷ், சேட்டு - ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி - சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.

ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் மேலும் அந்த  atm என்ற கிண்டலுக்கு உள்ளாகும் ஸ்ரீநிதியின்  அப்ளாஸ்

அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க... என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி - இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை... பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை... என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது வாழ்த்துக்குள்

ஆச்சியாக நடித்து இருக்கும் சுஜாதா ஒரு நிறைவான கதா பாத்திரம்

படத்திற்கு மிக பெரிய பலம் பசங்க பாண்டிராஜின்  வசனங்கள்தான் என்றால் அது மிகை இல்லை

இந்த படம் ஒரு சிறந்த படம் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது  ஆனாலும் வழக்கமான கிளைமாக்ஸ் கடைசியில் ஓவர் மசாலா என்ற வகையில் கொஞ்சம் விலகி செல்வதாகவே தோன்றுகிறது

இது போன்ற படங்களை வெளியிடும்  டைரக்டர் லிங்குசாமிக்கும் மனம்மார்ந்த நன்றி



மீண்டும் இனிமையான செய்திகளுடன் சந்திக்கும் வரை

நன்றிகளுடன் 


பாலசுப்ரமணியன்.சி
9965818701


















 

Monday, January 27, 2014

கோலி சோடா படத்தை பற்றி

கோலி சோடா  படத்தை பற்றி  சில positive ஆன  ரிசல்ட் பல ன் அன்பர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்

உண்மையில் இந்த படத்தை நானும் ஒரு சாதாரண படம் என்று தான் நினைத்தேன் அனால் பத்திரிகைகள் மற்றும் வலை தள  விமர்சனங்கள் நன்றாக இருந்ததாக  கூறி உள்ளார்கள், நான் இதை பத்தோடு பதினொன்று என நினைத்து பார்க்கவில்லை எனவே படத்தை உடனே பார்ஹு விமர்சனம்  என்னுடைய வலை பூவில் பதிவிடுகிறேன்

படத்தை பார்த்த நண்பர்கள் கமெண்ட்ஸ் சொல்லவும்


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி
9965818701

Saturday, January 18, 2014

ஜில்லா பட விமர்சனம்

ஜில்லா சினிமா விமர்சனம்

 

                                             வீரம் படத்தை பார்த்த உடனே  ஜில்லாவையும் பார்த்து விட்டேன் ஆனாலும் விமர்சனம் எழுதலாம் என்று நினைக்கும் போது  எதாவது  வேலை வந்து விடுகிறது. இது ரொம்ப தாமதம் என்று தெரியும் ஆனாலும் எழுதி பாப்போம் என்று தோன்றியதால் எழுதுகிறேன்

வழக்கம் போல் காரிமங்கலம் நகரத்தில் படத்தை பாப்போம் என்று தியேட்டர் போனால் அநியாயமாக 80 ரூபாய் டிக்கெட். தலையில் அடித்து கொண்டே வேறு வழி  இல்லாமல் சென்று அமர்ந்தேன்

படத்தில் மோகன்லால் வேறு இருந்ததால் ஏக  எதிர்பார்ப்பு என்  மனதில்.

சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

 தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும்  உள்ளது.

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!


காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

 பரோட்டா சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில் சிரிக்க முடியுது.

முன் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை. கடைசி 30 நிமிடங்கள் இழுவை. மொத்த படம் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டி உள்ளது.

படத்தில் காஜல் எதற்கு என்று டைரக்டர் தான் விளக்க வேண்டும்,

கடைசியில்  ஒரு தெலுங்கு படம் பார்த்த  மாதிரி இருந்தது  இந்த லச்சணத்தில்
இரண்டாம் பாகத்திற்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார்  இதற்கே முடியல இதில் இது வேறு





மீண்டும் வேறு ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கும் வரை
 என்றும்  அன்புடன்,

பாலசுப்ரமணியன்.சி

+91 9965818701






































Thursday, January 16, 2014

வீரம் சினிமா ஒரு பார்வை .

  வீரம் படம் ரிலீஸ் அன்று நான் பெங்களூரில்  கம்பெனி மீட்டிங்கில் இருந்தேன் நண்பர்களிடம் விசாரித்ததில் வீரம் மற்றும் ஜில்லா இரண்டு படமும் சூப்பர் என்று கூறியதால் முதலில் வீரம் பாப்போம் என்று என் ஊர் கரிமங்கலதில் ராஜம் தியட்டரில்  70 ரூபாய் கொடுத்து என் மச்சானுடன் படம் பார்க்க சென்றேன்

படம் வெளி வந்து மூன்று நாள் ஆனதால் மேலும் கரிமங்கலத்தில் 70 ரூபாய் என்பது மிக அதிகம் எனவே கூடம் குறைவு காலை காட்சி வேறு

  அஜீத்தின் அதிரடி ஆரம்பம்! என்று சொன்ன அஜீத் தரப்பு அதை மெய்பிக்கும் விதமாக "ஆரம்பம் வெளிவந்த இரண்டே மாதங்களில் "வீரம் படத்தை வெளியிட்டு, தன் பலத்தை காட்டியிருக்கிறது! இதுநாள் வரை "சிட்டிலுக்கில் வந்த "அல்டிமேட் ஸ்டார் இந்தப்படத்தில் வேஷ்டி சட்டையில், முரட்டு கிராமத்து இளைஞனாக, பாசமுள்ள அண்ணனாக பட்டையை கிளப்பி இருக்கிறார்!

கதைப்படி, அஜீத்குமார் ஒட்டன்சத்திரம் விநாயகமாக, விதார்த், "அன்பு பாலா உள்ளிட்ட 4 தம்பிகளுக்கு அண்ணனாக, அந்த ஊரில் அடிதடி, வம்பு, வழக்குகளில் ஈடுபடுவர்களை கூட்டிவந்து வீட்டில் விருந்து வைத்து, அதன்பின் வாயிற் கதவை மூடி அவர்களை நையப்புடைத்து அனுப்பும் நல்லவர்! சிறுவயதில் பெற்றோரை இழந்து 4 தம்பிகளுடன், டீ கிளாஸ் கழுவுவதில் வாழ்க்கையை தொடங்கியவர் விநாயகம் அஜீத், என்றாலும் பல லாரிகளுக்கு முதலாளி, ரைஸ்மில் ஓனர், விவசாயம், வெள்ளாமை, காய்கறி வியாபாரம் என தன் உழைப்பால் தன் குடும்பத்தை தூக்கி நிறுத்தி, ஊரில் பெரும் புள்ளியாக வலம் வரும் அஜீத்தும், அவரது 4 சகோதரர்களும் திருமணம் செய்து கொள்வதில்லை எனும் உறுதியுடன் வாழ்கின்றனர். காரணம், பொண்டாட்டி வந்தால் ஒற்றுமையான சகோதரர்களான தங்களை பிரித்து விடுவார்கள் எனும் நியாயமான பயம்தான்! ஆனாலும், விதார்த்துக்கும், பாலாவுக்கும் அண்ணன் அஜீத்துக்கு தெரியாமல் தலா ஆளுக்கு ஒரு காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் அடிதடி வழக்குகளுக்கு ஜாமின் வாங்கிதரும் பெரிய வக்கீலா(!)ன "பெயில் பெருமாள் சந்தானம், தன் காதலையும் உதறிவிட்டு இவர்களது சகோதர ஒற்றுமை கண்டு மெய்சிலிர்த்து அஜீத்தின் 5-வது தம்பியாக ஐயக்கியமாகிறார்.

 புராதான கோயில் சிற்பங்களை அழகுப்படுத்தும் புனிதப்பணி செய்யும் கோப்பெருந்தேவி தமன்னா, அந்த ஊர் கோயில் சிற்பங்களை சீரமைக்க தன் அழகிய இளம் பெண்கள் நிரம்பியகுழுவோடு அங்கு வரவழைக்கப்படுகிறார். ஊர் பெரும்புள்ளி அஜீத்தின் மைனஸ் பாயிண்ட்டுகளை எல்லாம் ப்ளஸ் பாயிண்ட்டாக காட்டி அஜீத் மீது தமன்னாவுக்கு காதல் வர வைக்க முயற்சிக்கின்றனர் சந்தானம் சகோதரர்கள். தமன்னாவுக்கு அஜீத் மீதும், அஜீத்துக்கு தமன்னா மீது ஒரே நேரத்தில் காதல் வருகிறது. ஆனால் அந்த காதலுக்கு, அஜீத் அது வரை சம்பாதித்து வைத்திருக்கும் வில்லன் கோஷ்டியும், தமன்னாவின் அப்பாவும் அகிம்சாவாதியுமான நாசரின் விரோதிகளும் சேர்ந்து உலை வைக்க பார்ப்பதுடன், அஜீத்-தமன்னா ஜோடியையும் அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டவும் களம் இறங்குகின்றனர். அவர்களது சதியில் இருந்து அஜீத்-தமன்னா ஜோடியும், அவர்களது காதலும் தப்பித்து கரை சேர்ந்ததா? கரம் சேர்ந்தனரா.? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான திக், திக் க்ளைமாக்ஸ்!

"அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார், ஒட்டன்சத்திரம் விநாயகமாக ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட் என்று வழக்கம் போலவே அடி தூள் பரத்தியிருக்கிறார். அதிலும் அந்த டிரையின் பைட் சூப்பர்ப்! "எல்லோரும் சந்தோஷமா திருப்தியா சாப்பிட்டு போங்க... என அஜீத் என்ட்ரியாகும் ஷாட்டில் பேசும் "பன்ச் வசனத்தில் தொடங்கி, "நம்ம கூட இருக்கிறவங்களை நாம் ஒழுங்காபார்த்துக்கிட்ட நம்மளை நமக்கு மேல இருப்பவன் நல்லா பார்த்துப்பான்... என்றும், "எவ்ளோ பேரு இருக்காங்கறது முக்கியமல்ல... யாரு இருக்காங்ககிறது தான் முக்கியம்... என்றும், "யாருடா அந்த 5வது ஆளு... யாருக்கும் அஞ்சாத ஆளு... என்றும் இடையிடையே அஜீத்தும், அவரை சார்ந்தவர்களும் பேசும் வசனங்களில் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸில் இந்த குடும்பம் உனக்கு என்ன செய்தது? என அஜீத்தை அடித்துபோட்டு வில்லன் அதுல் குல்கர்னி கேட்கும்போதும், இந்த குடும்பம் என்ன செய்யல்ல...?! "அம்மாவா சோறு போட்டாங்க, அப்பாவா சொல்லி கொடுத்தாங்க... என மேலும் பேசும்போது தியேட்டரில் தல, நன்றிகாட்ட, நல்லது செய்ய உனக்கு ஈடு இல்ல தல என ரசிகர்கள் கூக்குரலிடுகின்றனர். "பில்லா, "மங்காத்தா, "ஆரம்பம் மாதிரி டான் கேரக்டர்களுக்கு அஜீத்தின் "சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி ஸ்டைல் ஓ.கே., கிராமத்து இளைஞராக தமன்னாவை காதலிக்கும் பாத்திரங்களிலும் சால்ட் பெப்பர் லுக்கா என ரசிகர்கள் சில இடங்களில் சலிப்படையவும் செய்கின்றனர்.

 விதார்த், பாலா உள்ளிட்ட அஜீத் சகோதரர்கள், அதுல்குல்கர்னி உள்ளிட்ட வில்லன்கள், நாசர், சுமித்ரா, ஒரே காட்சியில் வரும் மறைந்த பெரியார்தாசன், அஜீத்வீட்டு எடுபிடி அப்புக்குட்டி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

 படத்தில் ஒளிபதிவு மிக அருமை அந்த ரயில் சண்டை காட்சியில் வெற்றியின் ஒளிபதிவு மிக சூப்பர்

சந்தேகமே இல்லாமல் இது தல பொங்கல்தான்

பெரும் எதிர்பார்போடு சென்ற ஜில்லா விமர்சனத்தை நாளை பதிவிடுகிறேன்




என்றும் ப்ரியமுடன் 
பாலசுப்ரமணியன்.சி 
+91 9965818701




















\