Pages

Saturday, March 30, 2013

காரிமங்கலம் நகரம் மிக வேகமாக வளரும் நகரமாக உள்ளது. ஏனெனில் இந்த நகரம் NH 7 இல் அமைந்துள்ளது  அதனால் போக்கு வரத்திற்கு சிரமம் இல்லாத நகரமாக உள்ளது. இந்த ஊரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் இப்போது கொடி கட்டி பறக்கிறது.தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி நகரில் நிலத்தின் விலையை விட இந்த ஊரில் நிலத்தின் விலை அதிகம். காரிமங்கலம் நகரத்தில் இருந்து பெங்களூர் மாநகரம் சுமார் 100 km தொலைவில் உள்ளது. சேலம் மாநகரம் சுமார் 85 km தொலைவில் உள்ளது
பெரு நகரங்களுக்கு மிக விரைவாக தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடலாம். அருகில் ஹோகனேக்கல் அருவி சுமார் 50 km தொலைவில் உள்ளது இந்த காரணங்களால் இந்த ஊரில் நிலத்தின் விலை மிக மிக அதிகமாக உள்ளது
இந்த ஊரில் முக்கியமாக மா விளைச்சல் அதிகம் அதே போல் தக்காளி மற்றும் மஞ்சள் விளைச்சலும் மிக அதிகம்
காரிமங்கலம் நகரத்தை சுற்றி விளையும் புளி அதிக புளிப்பு சுவை கொண்டது.
காரிமங்கலம் நகரத்தில் உள்ள வார சந்தை தமிழ் நாட்டில் உள்ள குறிபிடத்தக்க மிக முக்கிய மற்றும் பெரிய சந்தை ஆகும்.

No comments: