Pages

Saturday, January 18, 2014

ஜில்லா பட விமர்சனம்

ஜில்லா சினிமா விமர்சனம்

 

                                             வீரம் படத்தை பார்த்த உடனே  ஜில்லாவையும் பார்த்து விட்டேன் ஆனாலும் விமர்சனம் எழுதலாம் என்று நினைக்கும் போது  எதாவது  வேலை வந்து விடுகிறது. இது ரொம்ப தாமதம் என்று தெரியும் ஆனாலும் எழுதி பாப்போம் என்று தோன்றியதால் எழுதுகிறேன்

வழக்கம் போல் காரிமங்கலம் நகரத்தில் படத்தை பாப்போம் என்று தியேட்டர் போனால் அநியாயமாக 80 ரூபாய் டிக்கெட். தலையில் அடித்து கொண்டே வேறு வழி  இல்லாமல் சென்று அமர்ந்தேன்

படத்தில் மோகன்லால் வேறு இருந்ததால் ஏக  எதிர்பார்ப்பு என்  மனதில்.

சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

 தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும்  உள்ளது.

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!


காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

 பரோட்டா சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில் சிரிக்க முடியுது.

முன் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை. கடைசி 30 நிமிடங்கள் இழுவை. மொத்த படம் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டி உள்ளது.

படத்தில் காஜல் எதற்கு என்று டைரக்டர் தான் விளக்க வேண்டும்,

கடைசியில்  ஒரு தெலுங்கு படம் பார்த்த  மாதிரி இருந்தது  இந்த லச்சணத்தில்
இரண்டாம் பாகத்திற்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார்  இதற்கே முடியல இதில் இது வேறு





மீண்டும் வேறு ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கும் வரை
 என்றும்  அன்புடன்,

பாலசுப்ரமணியன்.சி

+91 9965818701






































No comments: