Pages

Saturday, March 29, 2014

என்னுடைய பார்வையில் குக்கூ படம்

என்னுடைய பார்வையில் குக்கூ  படம்

 ஆனந்த விகடன் புத்தகத்தில் டைரக்டர் ராஜு முருகன் வட்டியும் முதலும் தொடர் என் மனதின் மிக நெருக்கமான தொடர் அது என்னுடைய பள்ளி நாட்களையும் கிராம வாழ்கையும் நினைவு படுத்திய தொடர்  அந்த தொடர் முடியும் பொது ராஜு முருகன் நான் ஒரு படத்தை இயக்க இருப்பதால் இந்த தொடர் முடிவதாக எழுதி இருந்தார் அப்போதே படத்தின் தலைப்பையும் கூறி இருந்தார்

  நான் இந்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்தாலும் முதல் வாரம் பார்க்கவில்லை என் அறை  நண்பர் ராஜு அழைத்த காரனத்தால் உடனடியாக  இரவு காட்சி காண கோவை செந்தில் குமரன் சென்றோம் அனால் டிக்கெட் இல்லை பின்னர் பத்து நிமிட தாமதத்தில் கங்கா காம்ப்ளெக்ஸ் அரங்கில் படத்தை பார்த்தோம்  ஆனாலும் முதல் 5 நிமிட படத்தை பார்க்க முடியவில்லை

சரி படத்திற்கு வருவோம் ,


நாயகனும் நாயகியும் மாற்றுத் திறனாளிகள். இருவரும் அதனை வைத்து பிழைக்க நினைக்காமல் உழைத்து பிழைக்கிறார்கள். அவர்கள் சார்உலகில் மகிழ்வுடன் பயணிக்கிறார்கள்.

சில அலைவரிசை புரிதல்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். பார்வையற்ற நாயகியின் பணத்தாசை பிடித்த அண்ணனின் கட்டாயத்தினாலும் வாழ்வின் சூழலினாலும் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா என்பதே  படம் .
 
நாயகனாக தினேஷ், முதல் படத்தைப் போலவே பர்பார்மன்ஸில் அசத்தியிருக்கிறார். கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும்.

நாயகியாக மாளவிகா, நல்ல நடிப்பு, இயல்பான அழகு, தெறிக்கும் எக்ஸ்பிரசன் என பட்டையை கிளப்புகிறார். நமக்கு பேரழகிகளை விட பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றம் தான் பிடிக்கும். அதனாலேயே இவர் இன்னும் கவனிக்கப்படுவார்.
 
படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பங்களிப்பை வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த எம்ஜியார் நடிகர், குபேரன் சந்திரபாபு, இளையராஜா காதல் சோக பாடல்களுக்கு பணம் தந்து ரசிக்கும் நபர், பிஎம், ரயிலில் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் பயணம் செய்யும் நபர் என ஒவ்வொருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்காக போலி பொதுச்சேவை செய்யும் நபர்களை ஒரு காட்சியில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கிறார் இயக்குனர். அந்த ஒரு காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

போகிற போக்கில் நம் நடிகர்களையும் இன்றய அரசியல்  அழகா விமர்சிப்பது மிக அழகு 
 
  படத்தில் கண் பார்வை இல்லாத தினேஷ் இடம் நண்பர்கள் 2 லச்ச ரூபாய் தந்து அனுப்புவது நம்பும் படி இல்லை , மேலும் தேர்தல் காலங்களில் சோதனை என்ற பெயரில் மக்களை  வஞ்சிக்கும் போலீஸ் அதிகாரிகளை ராஜு முருகன்  தோலுரித்து காட்டி இருக்கிறார் 
 

சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.

அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்..., இருட்டில் கிடைத்த சுதந்திரம்..., தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு ஷொட்டு
 
 பாடல்கள் தேன் என கூறினால் அது ஒன்றும் மிகை இல்லை , ஆனாலும் கிளைமாக்ஸ் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக  இருந்திருக்கும் , தரமான படம் வழக்கமான கிளைமாக்ஸ் ,
 
 
 
 
இது  தாமதமான விமர்சனம் , அடுத்த முறை மிக விரைவில் சந்திக்கும் வரை 
 
நன்றிகளுடன் ,
பாலசுப்ரமணியன்.சி 
கோயம்புத்தூர் .
9965818701.
 















 

No comments: