Pages

Sunday, October 1, 2017

என்னுடைய பார்வையில் கருப்பன் படம்

என்னுடைய பார்வையில் கருப்பன் படம் 

நடிகர்கள் 
விஜய் சேதுபதி -கருப்பன் 
தான்யா ரவிச்சந்திரன் - அன்பு 
பாபி சிம்ஹா - கதிர் 
பசுபதி - மாயி 
சிங்கம் புலி-கருப்பனின் மாமா , மற்றும் பலர் 
இயக்குனர் : ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் 

விஜய் சேதுபதி படம் என்றாலே வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும் அதே ஆவலில் இந்த படத்தை ஈரோடு மகாராஜா திரையரங்கில் நண்பர் கல்யாண சுந்தரத்துடன் பார்க்க சென்றேன் 

சரி கதைக்கு வருவோம் , ஜல்லிக்கட்டு  மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை.
    வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் பாத்திரங்கள்தான்  தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு வம்பிழுப்பவர்களை அடித்துத் துவம்சம் செய்வதும் அருமையாக உள்ளது. பெரிய மீசையோடு கிராமாத்தானாக வரும் விஜய் சேதுபதி ரசிகர்களைக் கவர்வது உறுதி. சக்திவேலின்  ஒளிப்பதிவு சூப்பர் 

பாபி சிம்ஹா படத்தில் வழக்கமான வில்லன்  கதாபாத்திரம். கிட்டத்தட்ட கதையும் அவ்வாறே பயணிக்கிறது. ஆனால், இப்படம் சுபம் என்பதுதான் வித்தியாசம். இறைவி போல் குழப்பமான காதாபாத்திரம் இல்லாததால், வில்லத்தனத்தை முழு வீச்சில் காட்டக் கிடைத்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். 
விஜய் சேதுபதி மாடு அணையும் காட்சிகளை இமானின் பின்னணி இசையோடு பார்க்க அசத்தலாய் உள்ளது. விஜய் சேதுபதியின் ரொமான்ஸ் திகட்டுமளவு தூக்கலாய் உள்ளது. அவர் பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கிறது. அவருக்கு ஈடு கொடுத்து செமயாக நடித்துள்ளார் தான்யா. படத்தின் அத்தனை கதாப்பாத்திரங்களுமே மிக இயல்பான குணாதிசயத்தோடு இருப்பது சிறப்பு. மாயியாக நடித்துள்ள பசுபதி, வில்லன் கதிராக வரும் பாபி சிம்ஹா, அவருக்குத் துணை புரிய ஒத்தோதும் தவசி என கதாபாத்திர தேர்விலேயே இயக்குநர் பன்னீர் செல்வம் வாகை சூடி விடுகிறார்
           படத்தில் அங்கங்கே நாட்டுப்புற கலைகளை தூக்கி நிறுத்தி இருப்பதும், போகிறபோக்கில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்  பற்றி சிங்கம்புலி வசனம் அருமை  , குடியால் குடும்பம் கெடும் என்ற செய்திகளை சொன்னதுக்கு இயக்குனருக்கு 
      வழக்கமான பழைய திரைக்கதைதான் , ஆனாலும் விஜய் சேதுபதி நடிப்பில் பார்க்கும் போது படம் மாஸ்டர் பீஸ்தான்.
     நிச்சயமாக கொடுத்த காசுக்கு ஒர்த்தான படம்தான் 

நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி 
காரிமங்கலம் வட்டம்&அஞ்சல் 
தருமபுரி மாவட்டம் 
+919965818701


































































Thursday, July 27, 2017

விக்ரம் வேதா ஒரு பார்வை :-


                                     



ஓரம் போ  மற்றும் வ குவாட்டர் கட்டிங் போன்ற மொக்க படங்களாக கொடுத்த புஷ்கர்- காயத்திரி இருவரும் இணைந்து கணவன் மனைவி இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படம்தான் விக்ரம் வேதா .

   நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய சொந்த ஊரான காரிமங்கலம் நகரில் ராமயா சினிமாவில் இந்த படத்தை பார்த்தேன் , இப்பொழுது இந்த ரம்யா திரையரங்கம் சிறப்பான இருக்கை  வசதிகளுடன் உள்ளது .

படத்திற்கு வருவோம்

விக்ரம் - மேடி  ( மாதவன் )
வேதா - விஜய் சேதுபதி
மற்றும் வரலக்ஷ்மி , ஷ்ரத்தா  
           
போலீஸ் டிரஸ் இல்லாத மாதவனும் ' 16 கொலை செய்த விஜய் சேதுபதியின் தெனாவட்டான நடிப்பும் படத்தின் ஆக சிறந்த பலம் . அதுவும் விஜய் சேதுபதி வாய்ஸ் மாடுலேஷன் இல் சார் ஒரு கத சொல்லட்டுமா என்று ஆரம்பிப்பது செம்ம கெத்து ,
 
      படத்தின் தலைப்பு குறிப்பிடுவதைப் போல, விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான் படம். விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது தோளில் சுமந்துகொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு புதிர் கதையைச் சொல்லி, அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.   
 
  இங்கு ,
 
வேதாளம் - விஜய் சேதுபதி , விக்ரமாதித்தன் - மாதவன் ,
 
விக்ரம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கொடுங்குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் ஒரு காவல்துறை அணியில் இருக்கிறார். வேதா என்ற 14 கொலைகளைச் செய்த கேங்ஸ்டரை சுட்டுத்தள்ள முடிவுசெய்கிறது அந்த அணி. இந்த நிலையில் தானே முன்வந்து சரணடையும் வேதா, ஜாமீன் பெற்று வெளியேறுகிறான்.
 
வேதா தானாக முன்வந்து சரணடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலைத் தேட ஆரம்பிக்கிறான் விக்ரம். இப்படி பல முறை விக்ரமின் கையில் சிக்கும் வேதா ஒவ்வொரு முறையும் ஒரு புதிரை முன்வைக்கிறார். அந்தப் புதிருக்கான விடையை அடையும்போது, வேறு ஒரு புதிர்
 
சாதாரண த்ரில்லர்தான். ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி VS குற்றக்கும்பல் தலைவன் என்று மிகச் சாதாரணமாகத்தான் துவங்குகிறது படம். ஆனால், சற்று அவசரப்படாமல் கவனித்தால் பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கிறது இந்தப் படம். கடைசிக் காட்சி வரைக்கும் இந்த ஆச்சரியத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.
 
படத்தின் துவக்கத்தில் விக்ரம், ஓடாமல் இருக்கும் ஒரு பழைய புல்லட் வாகனத்தை சரி செய்ய ஆரம்பிக்கிறார். படம் நெடுக உதிரி பாகங்களுக்காக அலைகிறார். ஒவ்வொரு பாகமாகக் கிடைக்கிறது. புல்லட் முழுவதுமாக தயாராகும்போது, படம் உச்சகட்டத்தை எட்டுகிறது. இது போன்ற ரசிக்கத்தக்க காட்சிகள் படம் நெடுக இருக்கின்றன.
 
எப்போதுமே நீதியின் பக்கம் நிற்கும் விக்ரமே கதையின் நாயகனைப்போலத் தோன்றினாலும், படம் நகர நகர படத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது வேதாவின் பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய் சேதுபதி. கையில் ஒரு வடையை வைத்தபடி மிக சாவதானமாக காவல்துறையிடம் சரணடையும் துவக்கக் காட்சியிலேயே படத்தின் கவனத்தை அவர் மீது திருப்பிவிடுகிறார். எங்கேயுமே உறுத்தலில்லாத, மிகை நடிப்பில்லாத விஜய் சேதுபதி ஆக பெரிய பலம் .
 
பெண் பாத்திரங்களாக வரும் ஷ்ரத்தா, வரலட்சுமி ஆகியோரின் பாத்திரங்கள் சவாலானவையல்ல. தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். திரைக்கதைக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தின் மிக முக்கியமான பலங்கள், ஒளிப்பதிவும் பின்னணி இசையும். சற்றே இருண்மை படிந்த இந்தக் கதைக்கு உரிய நியாயத்தைச் செய்கிறது வினோத்தின் ஒளிப்பதிவு. அதேபோல சாமின் பின்னணி இசை, படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்துகிறது.
 
அதுவும் படத்தில் புரோட்டா எப்படி சாப்பிடுவது என்று கிளாஸ் எடுக்கும் வேதா செம்ம , படம் பார்த்தவர்கள் இனிமே புரோட்டா சாப்பிடும் பொது நிச்சயமாக விஜய் சேதுபதியின் நினைவு வரும் . படத்தின் வசனங்கள் பெரிய பலம் .
 
 
வித்தியாசமான கதை  மீது நம்பிக்கை வைத்து  ரசிகர்களை நம்பி எடுத்த புஷ்கர் காயத்திரி தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 
 
   ஜி எஸ் டி  பிரச்சினையில் தியேட்டர்  நிறைகிறது என்றால் அது விஜய் சேதுபதி மேஜிக்  தான் முழு முதல் காரணமாக இருக்கும் 
 
 

நன்றிகளுடன்,

பாலசுப்ரமணியன்.சி 

காரிமங்கலம் 

தர்மபுரி - 635111

+91 9965818701

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thursday, March 30, 2017

காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு

சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பதிவிடுகிறேன்
   காரிமங்கலம் நகரை பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தாலும் இந்தமுறை பூர்விக வரலாற்றை பதிகிறேன்.
   இது என்னோட சொந்த பதிவு இல்லை, இணையத்தில் இருந்து பெற்றது.

காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு:
காரிமங்கலம் எனும்பெயர் தகடூர் ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் காரி(மலையமான் திருமுடிக்காரி) என்னும் அரசன் படை நிறுத்திய இடம் பிற்காலத்தில் காரிமங்கலம் எனப் பெயர்க் கொள்ளலாயிற்று என்பர். மங்கலம்,பாடி போன்ற சொற்கள் படைநிறுத்திய இடங்களைக் குறிப்பதாகும்.
இவ்வூர் தகடூர் நாட்டின் ஒரு உட்பிரிவு நாடான கோவூர் நாட்டில் அடங்கிய ஒரு பகுதி
இவ்வூர்ப் பழம்பெருமையைச் சொல்லும் கல்வெட்டுகள் இவ்வூரை “கோவூர் நாட்டு காரிமங்கலத்து” எனக் குறிக்கின்றன.
சிந்தல்பாடியில் இருக்கும் நடுகல்லொன்றில் கோவூர் நாட்டு காரிமங்கலங் “கங்கஅதி அரைசரசரோடு தொறுக்கொள்ள” (ஆநிரை கவர்தல்) நடைபெற்ற போரில் வீரனொருவன் இறந்ததைக் குறிக்கிறது. 
இந்த நடுகல் காலம் 6-ம் நூற்றாண்டு, பல்லவ மகேந்திரவர்மர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததையும் குறிக்கிறது.
அதேபோல கதிரம்பட்டி நடுகல்லும் கோவூர்நாட்டு காரிமங்கலத்து குளவர் மக்கள் வீரர் இருவர் தொறுக் கொள்ளலில் இறந்த செய்தியைக் குறிக்கிறது. இந்நடுகல் இரண்டாம் மகேந்திரன் ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும்
தகடூர் அதியமான் காலம் கிபி ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஆயிரத்தென்னூறு ஆண்டுகளாக “காரிமங்கலம்” எனும் பெயர் மாறாமல் கொண்டுள்ள ஊர் இது என்பது பெருமை கொள்ளத்தக்கது.
குலோத்துங்க சோழனால் காரிமங்கலம் ஒட்டிய சிறு குன்றில் எடுக்கப்பட்ட “ஆரண்யேஸ்வரர் கோவிலும், பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆட்சியாளர் ஒருவராகிய ராமசாமிக் கவுண்டர் என்பவரின் ஜீவசமாதிக் கோவில்,திரௌபதியம்மன் கோவில் மற்றும் சிறு தெய்வக்கோவில்களும் இதன் சிறப்பு.
ஊருக்கு மேற்கே கோட்டைமேடு எனப்படும் இடம் இன்று புளியந்தோப்பாகவும் அங்கிருந்து தென்மேற்காக செல்லும் “தண்டு ஓணி” என சொல்லப்படும் பாதையும் உள்ளது.

ஓணி-மழைக்காலத்தில் நீர்செல்லும் ஓடையாகவும் வெயிற்காலத்தில் வண்டிகள் கால்நடைகள் செல்லும் நிலவழியாகவும் பயன்படுத்தப்படும்


பாலசுப்ரமணியன்.சி 
காரிமங்கலம் வட்டம்& அஞ்சல்  
தர்மபுரி மாவட்டம் 

Sunday, July 27, 2014

என் பார்வையில் சதுரங்க வேட்டை படம்

என் பார்வையில் சதுரங்க வேட்டை படம் ;
                                                                             படத்தை பற்றிய விளம்பரங்கள் ஒரு மணி நேரத்தில் 10 முறையாவது வரும் ஒரு சானலில் , எனவே ஆர்வம் அதிகம் ஆகி தனுஷின் இன் வேலை இலா பட்டதாரி படத்திற்கு முன்பே இதை பார்ப்பது என்று முடிவு செய்துவிட்டேன் , மேலும் படத்தை ரிலீஸ் செய்வது லிங்குசாமி என்பதால் ஒரு எதிர்பார்ப்பு

படத்தை பார்க்கலாம் என்று கோவை KG சினிமாஸ் இல் இரண்டாம் காச்சிக்காக online டிக்கெட் பெற்று சென்று அமர்ந்தேன் ,

சரி படத்திற்கு வருவோம் ,

                                            சிறு வயதில் அனாதை ஆன சிறுவன் வளர்ந்த பின் அதே சமூகத்தில் எப்படி இன்றய மக்களின் பேராசைகளை பணமாக மாற்றுகிறான் என்பது தான் கதை , சமீப ஈமு கோழி மோசடி , rise புல்லிங் பாதி விலையில் தங்கம்,MLM  மோசடி என அனைத்தையும் புட்டு புட்டு வைப்பது சூப்பர் ,

உண்மையில் நடராஜிக்கு இதுதான் முதல் படம் போல் இருக்கிறது , அதுவும் அந்த இரிடியம் ஆன்மிக lecture  அமேசிங் ,

பாம்பு கடத்தும் போது ஒரு தோற்றம், எம்எல்எம் வியாபாரம் செய்யும் போது வேறொரு தோற்றம், நகைக் கடை திட்டம், இரிடியம் ரைஸ் புல்லிங், ஆகியவற்றின் போது மற்றொரு தோற்றம் என அப்படியே அந்தந்த ஏமாற்று வேலைக்குப் பொருத்தமான ஆளாகவே மாறி விடுகிறார். வேறு யாராவது முன்னணி ஹீரோ நடித்திருந்தால் அந்த கதாபாத்திரத்தின் ஜீவனே மாறிப் போயிருக்கும். ஆனால், நட்ராஜ் நடித்திருப்பதைப் பார்க்கும் போது, ஏதோ அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை போன்றும், கதாபாத்திரம் போன்றே தோன்றுகிறது,

படத்தின் ஆகபெரும் பலம் வசனங்கள் தான் , சான்சேஇல்லை , எந்த பொய்யிலும் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கனும், உனக்கு மட்டும் புரிந்தால் நான் வேறு யோசிக்கணும் , நாமெல்லம் முதலாளி ஆக முயற்சி செய்யும் கம்யூனிஸ்ட் , நாளைக்கு நம்பிக்கை இல்லாதவன் சேர்த்து வைப்பான் எனக்கு அவசியம் இல்லை ,நான் யாரையும் ஏமாற்றவில்லை அவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன் , உன்னை ஏமாற்றியவனை எதிரியாக நினைக்கதே அவன் உனக்கு குரு போன்றவன் . இது போன்ற வசனங்கள் சாட்டை அடி  வசனங்கள் ,

கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்த முத்திரை பதிக்கிறார் இஷாரா. பெரிய விழிகள், பெரிய கன்னம், மருண்ட பார்வை... என்று முகமொழியிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். தமிழ்த் திரைக்கு ஒரு புது ராணி!
'மொழிப் பற்றோடு’ கட்டப்பஞ்சாயத்து செய்யும் 'சுத்தத் தமிழ்’ வில்லன், 'சிவப்பு நாடா’ நீதிமன்ற நிலுவைகள் ஒரு குற்றத்தைப் பிசுபிசுக்கச் செய்யும் உண்மை, அரசாங்க வளத்தை சூறையாடும் அசகாயத் தொழிலதிபர்கள், பாம்புக்காக மௌன விரதம் இருக்கும் பணத்தாசை வியாபாரி, 'பாதி விலையில் தங்கம்’ என்றதும் 'ஜோஜோ’வெனக் கிளம்பிவரும் 'மாட்டு மந்தை’ மக்கள் என... படத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கதாபாத்திரத்திலும் அத்தனை உண்மை ,
மூளையை மழுங்கடிக்கும் எம்.எல்.எம் பாலீஷ் பேச்சுகள், ஆன்மிக மந்திரங்களின் போலித்தனம், கும்பலாக ஏமாற ஆள் சேர்ப்பது அல்லது கும்பல் இருந்தால் ஏமாறத் தயாராக இருப்பது, மதுரை கிரானைட்ஸ் அதிபரின் ஆட்டம்... எனச் செய்திகளும் சைக்காலஜியுமாகப் படம் நெடுக உண்மையின் அரசியல்
 
நடராஜ் -இஸாரா குடுப்பம் நடத்தும் காட்சிகள் கவிதை, படத்தில் எங்கும் பிரமாண்டம் இல்லை ஆனாலும் சூப்பர். போகிற போக்கில் மதுரை giranite  மோசடிகளை   சொல்லிய உண்மையின் அரசியல்.
 
படத்தின் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
 
 
 
 
மீண்டும் விரைவில் சந்திக்கும் வரை ,
 
 நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி 
+91 996581871
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






















 

Saturday, March 29, 2014

என்னுடைய பார்வையில் குக்கூ படம்

என்னுடைய பார்வையில் குக்கூ  படம்

 ஆனந்த விகடன் புத்தகத்தில் டைரக்டர் ராஜு முருகன் வட்டியும் முதலும் தொடர் என் மனதின் மிக நெருக்கமான தொடர் அது என்னுடைய பள்ளி நாட்களையும் கிராம வாழ்கையும் நினைவு படுத்திய தொடர்  அந்த தொடர் முடியும் பொது ராஜு முருகன் நான் ஒரு படத்தை இயக்க இருப்பதால் இந்த தொடர் முடிவதாக எழுதி இருந்தார் அப்போதே படத்தின் தலைப்பையும் கூறி இருந்தார்

  நான் இந்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்தாலும் முதல் வாரம் பார்க்கவில்லை என் அறை  நண்பர் ராஜு அழைத்த காரனத்தால் உடனடியாக  இரவு காட்சி காண கோவை செந்தில் குமரன் சென்றோம் அனால் டிக்கெட் இல்லை பின்னர் பத்து நிமிட தாமதத்தில் கங்கா காம்ப்ளெக்ஸ் அரங்கில் படத்தை பார்த்தோம்  ஆனாலும் முதல் 5 நிமிட படத்தை பார்க்க முடியவில்லை

சரி படத்திற்கு வருவோம் ,


நாயகனும் நாயகியும் மாற்றுத் திறனாளிகள். இருவரும் அதனை வைத்து பிழைக்க நினைக்காமல் உழைத்து பிழைக்கிறார்கள். அவர்கள் சார்உலகில் மகிழ்வுடன் பயணிக்கிறார்கள்.

சில அலைவரிசை புரிதல்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். பார்வையற்ற நாயகியின் பணத்தாசை பிடித்த அண்ணனின் கட்டாயத்தினாலும் வாழ்வின் சூழலினாலும் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா என்பதே  படம் .
 
நாயகனாக தினேஷ், முதல் படத்தைப் போலவே பர்பார்மன்ஸில் அசத்தியிருக்கிறார். கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும்.

நாயகியாக மாளவிகா, நல்ல நடிப்பு, இயல்பான அழகு, தெறிக்கும் எக்ஸ்பிரசன் என பட்டையை கிளப்புகிறார். நமக்கு பேரழகிகளை விட பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றம் தான் பிடிக்கும். அதனாலேயே இவர் இன்னும் கவனிக்கப்படுவார்.
 
படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பங்களிப்பை வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த எம்ஜியார் நடிகர், குபேரன் சந்திரபாபு, இளையராஜா காதல் சோக பாடல்களுக்கு பணம் தந்து ரசிக்கும் நபர், பிஎம், ரயிலில் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் பயணம் செய்யும் நபர் என ஒவ்வொருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்காக போலி பொதுச்சேவை செய்யும் நபர்களை ஒரு காட்சியில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கிறார் இயக்குனர். அந்த ஒரு காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

போகிற போக்கில் நம் நடிகர்களையும் இன்றய அரசியல்  அழகா விமர்சிப்பது மிக அழகு 
 
  படத்தில் கண் பார்வை இல்லாத தினேஷ் இடம் நண்பர்கள் 2 லச்ச ரூபாய் தந்து அனுப்புவது நம்பும் படி இல்லை , மேலும் தேர்தல் காலங்களில் சோதனை என்ற பெயரில் மக்களை  வஞ்சிக்கும் போலீஸ் அதிகாரிகளை ராஜு முருகன்  தோலுரித்து காட்டி இருக்கிறார் 
 

சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.

அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்..., இருட்டில் கிடைத்த சுதந்திரம்..., தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு ஷொட்டு
 
 பாடல்கள் தேன் என கூறினால் அது ஒன்றும் மிகை இல்லை , ஆனாலும் கிளைமாக்ஸ் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக  இருந்திருக்கும் , தரமான படம் வழக்கமான கிளைமாக்ஸ் ,
 
 
 
 
இது  தாமதமான விமர்சனம் , அடுத்த முறை மிக விரைவில் சந்திக்கும் வரை 
 
நன்றிகளுடன் ,
பாலசுப்ரமணியன்.சி 
கோயம்புத்தூர் .
9965818701.
 















 

Friday, March 28, 2014

குக்கூ. படத்தை பற்றி

குக்கூ. படத்தை பற்றி ,

                             இந்த படத்தை ரிலீஸ் ஆன உடனே பார்த்து விட வேண்டும் என எண்ணி இருந்தேன் ஆனாலும் வேலை பளு காரணமாக படத்தை பார்க்க முடியவில்லை , நான் ராஜு முருகனின் வட்டியும் முதலும் தொடரின் மிக பெரிய அடிமை , ஆனந்த விகடனில் அது தொடராக வெளி வந்த போது ஒரு வாரம் கூட  விடாமல் படித்தவன்  அதனால் தான் அந்த அளவுக்கு ஆர்வம்

தாமதம் என்றாலும் இன்று இரவுக்குள் படத்தின் விமர்சனத்தை இங்கு பதிவிடுகிறேன்


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன் .சி
கோயம்புத்தூர்
+91 9965818701.

Wednesday, March 12, 2014

நிமிர்ந்து நில் சினிமா விமர்சனம் - என் பார்வையில்

நிமிர்ந்து நில்  சினிமா விமர்சனம் - என்  பார்வையில்,

   மிக நீண்ட நீண்ட இடைவெளிக்கு பிறகு பட விமர்சனம் எழுதுகிறேன் ,சமீபத்தில் முக்கிய படங்கள் எதுவும் வரவில்லை விஜய் சேதுபதி படமும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் விமர்சனம் எழுதவில்லை ,

சமுதிரகனியின் படம் என்றாலே நிச்சயம் சமூக விழிப்புணர்வு இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும், மேலும் சமீபத்தில் அவர் படம் சாட்டை என்ற படத்தில் இடம் பெற்ற வசங்கள் மிகபெரிய வரவேற்ப்பை பெற்றன. எனவே இந்த் படத்திற்கும் வசனங்கள் மீது பெரிய எதிபார்ப்பு எனக்கு இருந்தது.

ஜெயம் ரவிக்கும் சமீபத்தில் எந்த ஹிட் படமும் இல்லை மேலும் படம் வெள்ளியன்று வெளியாகும் என்று கூறினார்கள், அனால் வரவில்லை சனிகிழமை அன்று வெளியான உடனே பார்க்க வேண்டும் என நினைத்தேன் அனால் முடியவில்லை நண்பர்களுடன் நேற்றுதான் பார்த்தேன்.

நான்  இந்த படத்தை  கோவை  செந்தில் குமரன் அ.ரங்கில் என் அறை தோழர் மற்றும் இன்னும் சில நண்பர்களுடன் அமர்ந்தேன்

சரி கதைக்கு வருவோம்,

நேர்மையாக வாழ நினைக்கும் பொறியியல் பட்டதாரியான ஜெயம் ரவி ஒரு நாள் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது போக்குவரத்து காவலரால் உண்டாகும் சின்ன பிரச்சனையால் உண்டான கோபம் அது எங்கு போய்  முடிகிறது என்பதுதான் படம்.
நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது. இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்.

ஜெயம் ரவியால் பதிக்கப்பட்ட  போலீஸ் மற்றும் ஜட்ஜ் இருவரும் ஜெயம் ரவியை போலீஸ் கொண்டு சாகும் அளவுக்கு அடிக்கிறார்கள்  இதனால் பொங்கி எழும் ஜெயம் ரவி இவர்கள் அனைவரும் பழி வாங்க இல்லாத ஒரு ஆள் பெயரில் பாஸ்போர்ட் driving licence , voter id மற்றும் death certificate போன்ற அனைத்தும் பெறுகிறார் இதன் மூலம் மொத்தம் 147 பேர் மாட்டுகிறார்கள் இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்  ஜெயம் ரவி

இடைவேளை வரை மாட்டிய  அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள் , இடைவேளை வரை வேகமாக செல்லும் படம் பின்னர் சற்று தடுமாறுகிறது என்பதே உண்மை.

அமலபாலுக்கு இந்த படத்தை பொறுத்தவரை பெரிய  வேலை இல்லை அவர் பாத்திரம் இல்லாவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது.நாயகனின் நண்பனாக சூரி நிறைவாக வந்து காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக செய்து போகிறார். கோபிநாத்தும் படத்தில் இருக்கிறார்.

பாடல்களை பொறுத்தவரை படத்தில் எதற்கு என்றே தெரியவில்லை , சரத்குமார் CBI அதிகாரியாக 10 நிமிடம் வந்து செல்கிறார்,.

இடைவேளைக்கு பின் வரும் ஆந்தர  ஜெய் சிம்ம ரெட்டியாக  இன்னொரு பாத்திரத்திலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஜெயம் ரவி. அவரை  இறுதியில் கொலை செய்வது ஏன் என்று தெரியவில்லை.

ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.

ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.

லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது. ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது அனால் சற்று தடம் புரண்டுவிட்டது 
 
ஆனாலும் படம் பார்க்கும் பொது அந்நியன்  மற்றும் சாமுராய் போன்ற படங்களின் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை 
 
ஆனாலும் படத்தை ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம் 
 
 
 







































 

Wednesday, January 29, 2014

என்னுடைய பார்வையில் கோலி சோடா பட விமர்சனம்

என்னுடைய பார்வையில் கோலி சோடா பட விமர்சனம் ,

இந்த படத்தை பற்றி நல்ல படம் என்று நான் கேள்வி பட்டும் படத்தை ஒரு வார தாமதத்திற்கு பிறகு கோவை கங்கா திரை அரங்கில் பார்த்தேன் என்  அறை நண்பர் ராஜீவ் படத்தை பார்க்க என்னுடன் மூன்றாவது முறையாக வந்ததால் எனக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது

சரி  படத்திற்கு வருவோம் .

படத்தில் நடித்து இருப்பவர்கள் பசங்க படத்தில் பள்ளி சிறுவர்களாக நடித்த கிஷோர் ,பாண்டி மற்றும் ஸ்ரீராம் போன்றவர்களே இந்த படத்தில் வளர்ந்த வாலிப சிறுவர்களாக

தங்களக்கு என்று எந்த அடையாளம் இல்லாத கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கி பிழைக்கும் சிறுவர்கள் பின்னர் ஒரு தங்கலுய்க்கன அடையாளத்தை அடையும் போது அந்த அடையாளத்தை அழிக்கும்  வில்லன் கூட்டமும் மீண்டும் தங்கள் அடையாளங்களை அந்த சிறுவர்கள் அடைந்தார்களா  என்பது தான் படம்

ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி - கிஷோர், சித்தப்பா - பாண்டி, குட்டிமணி - முருகேஷ், சேட்டு - ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி - சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.

ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் மேலும் அந்த  atm என்ற கிண்டலுக்கு உள்ளாகும் ஸ்ரீநிதியின்  அப்ளாஸ்

அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க... என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி - இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை... பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை... என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது வாழ்த்துக்குள்

ஆச்சியாக நடித்து இருக்கும் சுஜாதா ஒரு நிறைவான கதா பாத்திரம்

படத்திற்கு மிக பெரிய பலம் பசங்க பாண்டிராஜின்  வசனங்கள்தான் என்றால் அது மிகை இல்லை

இந்த படம் ஒரு சிறந்த படம் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது  ஆனாலும் வழக்கமான கிளைமாக்ஸ் கடைசியில் ஓவர் மசாலா என்ற வகையில் கொஞ்சம் விலகி செல்வதாகவே தோன்றுகிறது

இது போன்ற படங்களை வெளியிடும்  டைரக்டர் லிங்குசாமிக்கும் மனம்மார்ந்த நன்றி



மீண்டும் இனிமையான செய்திகளுடன் சந்திக்கும் வரை

நன்றிகளுடன் 


பாலசுப்ரமணியன்.சி
9965818701


















 

Monday, January 27, 2014

கோலி சோடா படத்தை பற்றி

கோலி சோடா  படத்தை பற்றி  சில positive ஆன  ரிசல்ட் பல ன் அன்பர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்

உண்மையில் இந்த படத்தை நானும் ஒரு சாதாரண படம் என்று தான் நினைத்தேன் அனால் பத்திரிகைகள் மற்றும் வலை தள  விமர்சனங்கள் நன்றாக இருந்ததாக  கூறி உள்ளார்கள், நான் இதை பத்தோடு பதினொன்று என நினைத்து பார்க்கவில்லை எனவே படத்தை உடனே பார்ஹு விமர்சனம்  என்னுடைய வலை பூவில் பதிவிடுகிறேன்

படத்தை பார்த்த நண்பர்கள் கமெண்ட்ஸ் சொல்லவும்


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி
9965818701

Saturday, January 18, 2014

ஜில்லா பட விமர்சனம்

ஜில்லா சினிமா விமர்சனம்

 

                                             வீரம் படத்தை பார்த்த உடனே  ஜில்லாவையும் பார்த்து விட்டேன் ஆனாலும் விமர்சனம் எழுதலாம் என்று நினைக்கும் போது  எதாவது  வேலை வந்து விடுகிறது. இது ரொம்ப தாமதம் என்று தெரியும் ஆனாலும் எழுதி பாப்போம் என்று தோன்றியதால் எழுதுகிறேன்

வழக்கம் போல் காரிமங்கலம் நகரத்தில் படத்தை பாப்போம் என்று தியேட்டர் போனால் அநியாயமாக 80 ரூபாய் டிக்கெட். தலையில் அடித்து கொண்டே வேறு வழி  இல்லாமல் சென்று அமர்ந்தேன்

படத்தில் மோகன்லால் வேறு இருந்ததால் ஏக  எதிர்பார்ப்பு என்  மனதில்.

சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

 தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும்  உள்ளது.

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!


காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

 பரோட்டா சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில் சிரிக்க முடியுது.

முன் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை. கடைசி 30 நிமிடங்கள் இழுவை. மொத்த படம் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டி உள்ளது.

படத்தில் காஜல் எதற்கு என்று டைரக்டர் தான் விளக்க வேண்டும்,

கடைசியில்  ஒரு தெலுங்கு படம் பார்த்த  மாதிரி இருந்தது  இந்த லச்சணத்தில்
இரண்டாம் பாகத்திற்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார்  இதற்கே முடியல இதில் இது வேறு





மீண்டும் வேறு ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கும் வரை
 என்றும்  அன்புடன்,

பாலசுப்ரமணியன்.சி

+91 9965818701






































Thursday, January 16, 2014

வீரம் சினிமா ஒரு பார்வை .

  வீரம் படம் ரிலீஸ் அன்று நான் பெங்களூரில்  கம்பெனி மீட்டிங்கில் இருந்தேன் நண்பர்களிடம் விசாரித்ததில் வீரம் மற்றும் ஜில்லா இரண்டு படமும் சூப்பர் என்று கூறியதால் முதலில் வீரம் பாப்போம் என்று என் ஊர் கரிமங்கலதில் ராஜம் தியட்டரில்  70 ரூபாய் கொடுத்து என் மச்சானுடன் படம் பார்க்க சென்றேன்

படம் வெளி வந்து மூன்று நாள் ஆனதால் மேலும் கரிமங்கலத்தில் 70 ரூபாய் என்பது மிக அதிகம் எனவே கூடம் குறைவு காலை காட்சி வேறு

  அஜீத்தின் அதிரடி ஆரம்பம்! என்று சொன்ன அஜீத் தரப்பு அதை மெய்பிக்கும் விதமாக "ஆரம்பம் வெளிவந்த இரண்டே மாதங்களில் "வீரம் படத்தை வெளியிட்டு, தன் பலத்தை காட்டியிருக்கிறது! இதுநாள் வரை "சிட்டிலுக்கில் வந்த "அல்டிமேட் ஸ்டார் இந்தப்படத்தில் வேஷ்டி சட்டையில், முரட்டு கிராமத்து இளைஞனாக, பாசமுள்ள அண்ணனாக பட்டையை கிளப்பி இருக்கிறார்!

கதைப்படி, அஜீத்குமார் ஒட்டன்சத்திரம் விநாயகமாக, விதார்த், "அன்பு பாலா உள்ளிட்ட 4 தம்பிகளுக்கு அண்ணனாக, அந்த ஊரில் அடிதடி, வம்பு, வழக்குகளில் ஈடுபடுவர்களை கூட்டிவந்து வீட்டில் விருந்து வைத்து, அதன்பின் வாயிற் கதவை மூடி அவர்களை நையப்புடைத்து அனுப்பும் நல்லவர்! சிறுவயதில் பெற்றோரை இழந்து 4 தம்பிகளுடன், டீ கிளாஸ் கழுவுவதில் வாழ்க்கையை தொடங்கியவர் விநாயகம் அஜீத், என்றாலும் பல லாரிகளுக்கு முதலாளி, ரைஸ்மில் ஓனர், விவசாயம், வெள்ளாமை, காய்கறி வியாபாரம் என தன் உழைப்பால் தன் குடும்பத்தை தூக்கி நிறுத்தி, ஊரில் பெரும் புள்ளியாக வலம் வரும் அஜீத்தும், அவரது 4 சகோதரர்களும் திருமணம் செய்து கொள்வதில்லை எனும் உறுதியுடன் வாழ்கின்றனர். காரணம், பொண்டாட்டி வந்தால் ஒற்றுமையான சகோதரர்களான தங்களை பிரித்து விடுவார்கள் எனும் நியாயமான பயம்தான்! ஆனாலும், விதார்த்துக்கும், பாலாவுக்கும் அண்ணன் அஜீத்துக்கு தெரியாமல் தலா ஆளுக்கு ஒரு காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் அடிதடி வழக்குகளுக்கு ஜாமின் வாங்கிதரும் பெரிய வக்கீலா(!)ன "பெயில் பெருமாள் சந்தானம், தன் காதலையும் உதறிவிட்டு இவர்களது சகோதர ஒற்றுமை கண்டு மெய்சிலிர்த்து அஜீத்தின் 5-வது தம்பியாக ஐயக்கியமாகிறார்.

 புராதான கோயில் சிற்பங்களை அழகுப்படுத்தும் புனிதப்பணி செய்யும் கோப்பெருந்தேவி தமன்னா, அந்த ஊர் கோயில் சிற்பங்களை சீரமைக்க தன் அழகிய இளம் பெண்கள் நிரம்பியகுழுவோடு அங்கு வரவழைக்கப்படுகிறார். ஊர் பெரும்புள்ளி அஜீத்தின் மைனஸ் பாயிண்ட்டுகளை எல்லாம் ப்ளஸ் பாயிண்ட்டாக காட்டி அஜீத் மீது தமன்னாவுக்கு காதல் வர வைக்க முயற்சிக்கின்றனர் சந்தானம் சகோதரர்கள். தமன்னாவுக்கு அஜீத் மீதும், அஜீத்துக்கு தமன்னா மீது ஒரே நேரத்தில் காதல் வருகிறது. ஆனால் அந்த காதலுக்கு, அஜீத் அது வரை சம்பாதித்து வைத்திருக்கும் வில்லன் கோஷ்டியும், தமன்னாவின் அப்பாவும் அகிம்சாவாதியுமான நாசரின் விரோதிகளும் சேர்ந்து உலை வைக்க பார்ப்பதுடன், அஜீத்-தமன்னா ஜோடியையும் அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டவும் களம் இறங்குகின்றனர். அவர்களது சதியில் இருந்து அஜீத்-தமன்னா ஜோடியும், அவர்களது காதலும் தப்பித்து கரை சேர்ந்ததா? கரம் சேர்ந்தனரா.? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான திக், திக் க்ளைமாக்ஸ்!

"அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார், ஒட்டன்சத்திரம் விநாயகமாக ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட் என்று வழக்கம் போலவே அடி தூள் பரத்தியிருக்கிறார். அதிலும் அந்த டிரையின் பைட் சூப்பர்ப்! "எல்லோரும் சந்தோஷமா திருப்தியா சாப்பிட்டு போங்க... என அஜீத் என்ட்ரியாகும் ஷாட்டில் பேசும் "பன்ச் வசனத்தில் தொடங்கி, "நம்ம கூட இருக்கிறவங்களை நாம் ஒழுங்காபார்த்துக்கிட்ட நம்மளை நமக்கு மேல இருப்பவன் நல்லா பார்த்துப்பான்... என்றும், "எவ்ளோ பேரு இருக்காங்கறது முக்கியமல்ல... யாரு இருக்காங்ககிறது தான் முக்கியம்... என்றும், "யாருடா அந்த 5வது ஆளு... யாருக்கும் அஞ்சாத ஆளு... என்றும் இடையிடையே அஜீத்தும், அவரை சார்ந்தவர்களும் பேசும் வசனங்களில் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸில் இந்த குடும்பம் உனக்கு என்ன செய்தது? என அஜீத்தை அடித்துபோட்டு வில்லன் அதுல் குல்கர்னி கேட்கும்போதும், இந்த குடும்பம் என்ன செய்யல்ல...?! "அம்மாவா சோறு போட்டாங்க, அப்பாவா சொல்லி கொடுத்தாங்க... என மேலும் பேசும்போது தியேட்டரில் தல, நன்றிகாட்ட, நல்லது செய்ய உனக்கு ஈடு இல்ல தல என ரசிகர்கள் கூக்குரலிடுகின்றனர். "பில்லா, "மங்காத்தா, "ஆரம்பம் மாதிரி டான் கேரக்டர்களுக்கு அஜீத்தின் "சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி ஸ்டைல் ஓ.கே., கிராமத்து இளைஞராக தமன்னாவை காதலிக்கும் பாத்திரங்களிலும் சால்ட் பெப்பர் லுக்கா என ரசிகர்கள் சில இடங்களில் சலிப்படையவும் செய்கின்றனர்.

 விதார்த், பாலா உள்ளிட்ட அஜீத் சகோதரர்கள், அதுல்குல்கர்னி உள்ளிட்ட வில்லன்கள், நாசர், சுமித்ரா, ஒரே காட்சியில் வரும் மறைந்த பெரியார்தாசன், அஜீத்வீட்டு எடுபிடி அப்புக்குட்டி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

 படத்தில் ஒளிபதிவு மிக அருமை அந்த ரயில் சண்டை காட்சியில் வெற்றியின் ஒளிபதிவு மிக சூப்பர்

சந்தேகமே இல்லாமல் இது தல பொங்கல்தான்

பெரும் எதிர்பார்போடு சென்ற ஜில்லா விமர்சனத்தை நாளை பதிவிடுகிறேன்




என்றும் ப்ரியமுடன் 
பாலசுப்ரமணியன்.சி 
+91 9965818701




















\

Sunday, December 29, 2013

என்றென்றும் புன்னகை படம் ஒரு பார்வை

என்றென்றும்  புன்னகை  படம் ஒரு பார்வை :

இந்த படத்தின் விமர்சனங்களை நிறையவே படித்து இருப்பீர்கள் எனவே இங்கு இந்த படத்தில் என்னை கவர்ந்த காட்சிகளை இங்கு பதிவிடுகிறேன்

 இந்த படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி செந்தில் திரை அரங்கில் நண்பர்களுடன் பார்க்க சென்றேன்  முந்தின நாள் பிரியாணி படம் பாதிப்பு வேறு அதனால் அரை மனதுடன் அமர்ந்தேன்

நண்பன் படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள். இந்தப்படத்தில் ஜீவா, சந்தானம், வினய் மூவரும் நண்பர்கள் கிட்டத்தட்ட இதுவும் நட்பை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான்!

இந்தகதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் படமாக்க முடியுமோ? அத்தனைக்கு அத்தனை காமெடியாகவும், கலர்புல்லாவும், அதேநேரம் கமர்ஷியலாகவும் படமாக்கி என்றென்றும் புன்னகை படத்தை எக்குத்தப்பாக எகிற வைத்து இருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்!

கையில் மதுக்கோப்பை, கண்ணில் மதுபோதை, நக்கல் பேச்சு, நச் என்ற கோபம்... என வழக்கம் போலவே தன் பாணி நடிப்பில் இந்தப்படத்தையும் தூக்கி நிறுத்த முற்பட்டிருக்கிறார் கெளதம் பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகர் ஜீவா. இவரது அம்மா, அப்பா நாசரை விட்டு ஓடிப்போனவர்... என்று நண்பர்கள் கலாய்க்கும் போது அவர் படும் வேதனை, கோபம், ஏற்கும் சபதம் எல்லாம் அவரது முகத்தில் கலவையாக சேர்ந்து திரையில் எதிரொளிக்கும் சீன்கள் போதும்

கதைப்படி, ஹீரோ ஜீவாவிற்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. காதல் என்றாலே கடுப்பு! காரணம், அவரது அப்பாவை விட்டு எஸ் ஆன அவரது அம்மா! அதனால் காதல், கன்னியர் என்றாலே கடுப்பாகும் ஜீவாவுடன், சிறுவயது முதலே நட்பில் இருக்கும் சந்தானமும், வினய்யும், ஜீவாவுக்காக காதலிப்பது இல்லை, திருமணம் செய்து கொள்வதில்லை... எனும் உறுதியுடன் ஒரே படிப்பு, ஒரே குடிப்பு, ஒரே மாதிரி வேலை, ஒரே அலுவலகம், ஒரே படுக்கை... என நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை சலித்துப்போய் நண்பர்கள் சந்தானம், வினய் இருவரும் தங்கள் பெற்றோர் சொல்படி கல்யாணம் கட்டிக்கொண்டு இல்வாழ்க்கையில் இறங்க, விளம்பர பட இயக்குநரான ஜீவா தனிமையில் தவிக்கிறார்.

ஆனாலும் த்ரிஷா மேக்கப்  தாண்டியும்  முகத்தில் வயசு நன்றாக தெரிகிறது. ஆனாலும் நன்றாகத்தான் இருக்கிறார் நீண்ட நாளைக்கு பிறகு ஜீவாவிற்கு மற்றும் த்ரிஷாவிற்கு ஒரு நல்ல வெற்றி

அதே போல் படத்தின் இன்னொரு முக்கியமான பலம் இசை  வாழ்த்துக்கள் ஹாரிஸ் மற்றும் நன்றி நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல இசை உங்களிடம் இருந்து.

அஹமத்தின் எழுத்து, இயக்கத்தில் ஆரம்பகாட்சிகளில் இது ஏதோ ஆணுக்கு ஆண் எனும் கொச்சையான உறவை வலியுறுத்தும் ஹே படமோ! எனும் மாயை உடைத்தெறிந்து எல்லாம் காமெடிக்குத்தான் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவது பலம்!


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன் .சி
கோவை .
+91 9965818701

















 

Wednesday, December 25, 2013

பிரியாணி சினிமா விமர்சனம்

பிரியாணி சினிமா விமர்சனம் :




நேற்று இரவு  கோவையில் நான் எவளவோ சொல்லியும் கேட்காமல் என் அறை தோழர் ராஜீவ் மற்றும் நண்பர் குணா மற்றும் சிலருடன் படம் பார்க்க கங்கா காம்ப்ளெக்ஸ் இல்  இரண்டாம் காட்சிக்கு சென்றோம்

ஒரே வரியில் சொல்வது என்றால் vegitable பிரியாணியை சிக்கன் பிரியாணி என்று சொல்லி ஏமாற்றி விட்டார்  வெங்கட் பிரபு , நாங்கள் எதிர் பார்த்தது என்னவோ அட்லீஸ்ட் குஸ்கா .

இந்த படம் யுவனின்  100 ஆவது படம் என்றால் யுவனே நம்பமாட்டார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ஹன்சிகா மோத்வானி
  • இயக்குனர் :வெங்கட்பிரபு
  •  இசை  : யுவன் சங்கர் ராஜா 
  •  தயாரிப்பு : ganavel ராஜா .


  • கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

    , பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

    சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்

    பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

    பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

    வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும்  எனும் வகையில் ஆறுதல்!

    இந்த படத்தில் ஹன்சிகா சும்மா அப்ப அப்ப வந்து ஆடிவிட்டு போகிறார் அவருக்கு tv இல் வேலை,

    commercial சினிமாவில் லாஜிக் கிடையாதுதான் அதற்காக கொலை பலி விழுந்த கார்த்திக்கும் பிரேம்ஜியும் சாதாரணமாக வெளியில் சுற்றுவதை  எப்படி சரி என்பது ?

    யப்பா வெங்கட் பிரபு முதலில் பிரேம் ஜி  ஐ க்ளோஸ் up  காட்டுவதை நிறுத்து எங்களால் முடியலை

    கடைசியில் தூக்கம் கெட்டு நண்பர்கள்  ராஜீவ், குணா மற்றும் நந்தகுமார் பாலாஜி, சுதன்  ஆகியோரை திட்டிக்கொண்டே என் அறை வந்து சேர்ந்தேன்.

    sorry வெங்கட் பிரபு பெட்டர் லக் நெக்ஸ்ட்  டைம்



    உங்கள் கமெண்ட்ஸ்  களை  எதிர்நோக்கும்

    பாலசுப்ரமணியன் .சி 

    கோவை .






























     

    Monday, December 16, 2013

    தலயின் பொங்கல் விருந்து ரெடி....!!!!!!!!!!1

    டிசம்பர் 20-ல் இசை ; ஜனவரி 10-ல் படம் - வீரம் ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு



    அஜீத் குமார் நடிக்க விஜயா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க, சிவாவின் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க மிக பிரம்மாண்டமாக தயாராகும் வீரம் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. ஜுங்கலீ மியூசிக் இசை நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அஜீத் குமாருடன் தமன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் அவருடன் நாசர்,அதுல் குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் ,தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது .

    அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் மாஸ் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் வழங்கி உள்ளார் , அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்தார். ஜனவரி 10ஆம் தேதி உலகெங்கும் வெளி வரும் வீரம் படம், பாடல்களில் மட்டுமின்றி , கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    வெற்றியின் ஒளிப்பதிவில், மிலனின் கலை வண்ணத்தில், காசி விஸ்வநாதனின் பட தொகுப்பில், செல்வாவின் சண்டை காட்சி அமைப்பில், தினேஷ் நடனம் அமைக்க , விவேகா பாடல் வரிகளுக்கு , தேவி ஸ்ரீ பிரசாத் பட்டையை கிளப்பும் இசையை தந்துள்ளார் .



    நன்றிகளுடன் 

    பாலசுப்ரமணியன்.சி 

    +91 9965818701



     

    Saturday, December 7, 2013

    அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை,

    நாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆட்சி முறை


    நமது நாட்டை சமீப காலமாக சீரழித்து வரும் போலி மதச்சார்பின்மை மற்றும் குடு்மப ஆட்சி முறை குறித்து, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலும், அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் கவர்னருமான எஸ்.கே.சின்கா டெக்கான் குரோனிக்கில் நாளிதழில் எழுதியுள்ளார்.
    சின்கா தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது: மதசார்பின்மை என்பது ஐரோப்பிய முறையாகும். அரசில் தேவாலயங்களின் ஆதிக்கம் ஏற்படக் கூடாதென்பதற்காக உருவாக்கப்பட்ட முறை. ஒரே மதம் உள்ள ஐரோப்பிய நாடுகளில், அந்த மதத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் அத்தகைய மதசார்பின்மை கொள்கையை நமது தலைவர்கள், அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதலில் ஏற்றுக் கொண்டனர். நமது அரசியலைமைப்புச் சட்டத்தில மதசார்பின்மை என்ற வார்த்தை முதலில் கிடையாது. பின்னர் இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் இது சேர்க்கப்பட்டது.

    மதச்சார்பின்மை என்றால் என்ன?:

    மகாத்மா காந்தியை பொறுத்தவரையில் மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதே ஆகும். இத்தகைய எண்ணமே அவரை நமது மிகப் பெரிய தலைவராக எடுத்துக் காட்டியது. அதே சமயம் நேருவின் மதசார்பின்மை கொள்கையானது மத ஆதிக்கம் இல்லாத அரசு என்ற ஐரோப்பிய கொள்கையாக இருந்தாலும், பிரிவினை காரணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எவ்வித மனக்குறையும் ஏற்பட்டு விடக் கூடாது; இந்தியாவில் தாங்களும் சமமான குடிமக்களே என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்; தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கருதி விடக்கூடாது என்ற அடிப்படையில் இருந்தது.

    நேரு ஆட்சிக் காலத்தில் மதக் கலவரம் எதுவும் நடந்ததில்லை; எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லாத, ஹஜ் யாத்திரைக்கு மானியம் வழங்கும் திட்டம் இந்தியாவில் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இஸ்லாமியர்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட திட்டமாக அது இருந்தது. ஓட்டுக்களைப் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமல்ல; ஏனென்றால், இஸ்லாமியர்களின் ஆதரவு இருந்தாலும் இல்லா விட்டாலும், நேருவும் அவருடைய கட்சியும் வெற்றி பெறும் சூழல் அப்போது நிலவியது.
    இஸ்லாமியர் நிலை: பிரிவினைக்கு காரணமான இரு நாடுகள் கொள்கைக்கு தாங்கள் பலியாகி விட்டதை இஸ்லாமியர்கள் உணர, நேருவின் இந்த சலுகைகள் காரணமாக அமைந்தன. இந்த உண்மை நிலையை உணர்ந்த இஸ்லாமியர் இடையே மத வேறுபாடும் கசப்புணர்வும் குறைய ஆரம்பித்தது. இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த நடிகர்களான மெஹருனிஷாவும், யூசுப் கானும் தங்களின் பெயர்களை மீனா குமாரி எனவும் திலீப் குமார் எனவும் மாற்றி கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

    ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் தங்களை மத அடையாளத்தை, பிரிவினைக்கு முன் இருந்தததை விடவும் கூடுதலாக காட்டிக் கொள்ள தயங்குவதில்லை. இந்தியாவின் பெரும்பான்மை சமுதாய கலாச்சாரத்துடன் தொடர்புடைய நமது தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய பாடல் உள்ளிட்டவைகளை ஏற்றுக் கொள்ள, அன்றைய இஸ்லாமியர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இன்று இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுமானால், மதச்சார்பின்மை என்று கூறிக் கொள்ளும் சக்திகளிடமிருந்தும், அடிப்படை மதவாத சக்திகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்.

    தடம் மாறிய மதச்சார்பின்மை:

    நேரு போன்று இல்லாமல், இந்திரா மத நம்பிக்கையற்றவராக இருக்கவில்லை; மதச் சடங்குகளை கடைப்பிடித்தார். அவரது மதசார்பின்மை ஓட்டு வங்கியை உருவாக்குவதையே மையமாகக் கொண்டிருந்தது. நேரு காலத்தில், அரசு செலவில் இப்தார் விருந்து நடத்தப்பட்டதில்லை. ஆனால் தற்போது வரிந்து கட்டிக் கொண்டு நடத்துகின்றனர். மற்ற எந்த மதத்தின் விழாவையும் இது போன்று அரசு சார்பில் கொண்டாடுவதில்லை. தேசிய பாதுகாப்பும், தேசிய நலனும் போலி மதசார்பின்மைவாதிகளால் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது. வங்கதேசத்தில் இருந்து அசாமில் சட்ட விரோதமாக குடியேறுவது, ஓட்டு வங்கிக்காக ஊக்குவிக்கப்படுகிறது. காஷ்மீரிலும் ஜிகாதி பயங்கரவாதிகளுக்கு எதிராக மென்மையான போக்கே கடைபிடிக்கப்படுகிறது. அதேசமயம் காஷ்மீரில் வாழும் பண்டிட்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
    காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான இந்து கோயில்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, 20 ஆண்டு ஆன பின்னரும் இன்றும் ஒரு பிரச்னையாக இருக்கிறது.

    எது மதவாதம்?: இஸ்லாமிய தலைவர்கள் பலரைக் கொண்டுள்ள பா.ஜ.,வை மதவாத கட்சியாக ஒதுக்கி வைத்து, தீண்டத்தகாத கட்சியாக நடத்துகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மதவாதக் கொள்கையைக் கொண்டுள்ள முஸ்லீம் லீக், மஜ்லிஸ் இ லிதிஹதுல் முஸ்லீமின், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கட்சி போன்றவற்றை, மதசார்பின்மை பற்றி பேசும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேர்த்துக் கொண்டு கவுரவிக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கோ அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, இஸ்லாமிய இனத்தவர்களின் வளர்ச்சிக்கே தனது ஆட்சியில் முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவிக்கிறார். அவருக்கு இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் பற்றியோ அவர்கள் பின்தங்கி இருப்பது பற்றியோ கவலையில்லை. 2008ம் ஆண்டு டில்லியின் துவாரகா பகுதியில் ரூ.22 கோடி அரசு செலவில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. அதே ஆண்டு அமர்நாத் ஆலய நிர்வாகத்திற்கு ரூ.2.2 கோடிக்கு குத்தகைக்கு விடப்பட்ட, வெறுமையாக கிடந்த 100 ஏக்கர் வனப்பகுதி, மதவாதிகளைத் திருப்தி செய்வதற்காக திரும்பப் பெறப்பட்டது. போலி மதசார்பின்மை பேசுபவர்களின் போக்கை விவரிக்க இது போன்று பல உதாரணங்களைக் காட்ட முடியும். உண்மையான மதசார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி வழங்குவது; எவரையும் திருப்தி செய்ய முயலாதது.

    குடும்ப ஆட்சி முறை:

    நமது நாட்டின் மற்றொரு துயரம், பரம்பரை ஆட்சி முறையை நோக்கிச் செல்வதாகும். இது ஜனநாயக ஆணி வேரை அழி்த்து, அரசியலில் பிரபுத்துவ முறையைக் கொண்டு வர வழி வகுக்கிறது. ஆளும் குடும்பத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்காக, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டன. குடும்பத்தாரால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தாரையே கொண்ட ஆட்சி முறையால், நாடு பல்வேறு பாதிப்புக்களை சந்திக்க இருக்கிறது. இந்த பரம்பரை ஆட்சிமுறை நோய், புற்றுநோய் போன்று மற்ற அரசியல் கட்சிகளிடையேயும் பரவி உள்ளது.


    இதை விட மிகவும் மோசமானது என்னவென்றால், இந்த பிரபுத்துவ கலாச்சாரம், ஆட்சியாளர்களை மட்டுமல்ல, அதிகாரிகளையும் ஆட்டுவிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட தற்போது மிகவும் அடிமைப்பட்டவர்களாக அதிகாரிகள் உள்ளனர். சமானிய மக்களும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை விடவும் அதிக அளவில் அதிகார ஆணவத்தால் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரம்பரை ஆட்சி முறை, முகஸ்துதி மற்றும் இடைத் தரகர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஆட்சியாளர்கள் அதிகார போதை காரணமாக, அனைத்தும் தங்களின் தலைமையில் நடக்கிறது என்ற எண்ணத்துடன் துணிச்சலாக செயல்படுகின்றனர். ஆட்சியாளர்கள் தவறே செய்யமாட்டார்கள்; அவர்கள் செய்வதெல்லாம் சரியானவையே என்ற போக்கும் உருவாகி உள்ளது. இந்த பரம்பரை ஆட்சி அதிகாரத்தை மீறி, நியாயமாக செயல்படும் துர்காசக்தி நாக்பால் போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். பிரபுத்துவ ஆட்சி முறையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்போ, ஒரு அமைச்சரின் தனிப்பட்ட பொறுப்பிற்கோ மதிப்பில்லை. ஒரு திட்டத்திற்கு ஒரு அமைச்சர் ஒப்புதல் கொடுத்து, எழுத்துபூர்வமாக அங்கீகரித்த பிறகு, அந்த திட்டம் தவறென கருத்ப்பட்டால், அதற்காக அமைச்சரைத் தண்டிப்பதில்லை; அதிகாரிகளே தண்டிக்கப்படுகின்றனர். இதற்கு விதிவிலக்காக திகழ்ந்தவர் லால் பகதூர் சாஸ்திரி மட்டுமே.

    ராகுல் நடத்திய நாடகம்:

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கிரிமினல் அரசியல்வாதிகள் தொடர்பான அவசர சட்டத்தை நியாயப்படுத்தி பத்திரிக்கையாளரிடையே பேசிக்கொண்டிருந்தபோது, கட்சியின் துணைத்தலைவர் ராகுல் திடீரென நுழைகிறார்; தனது கட்சி சகாக்களால் கொண்டு வரப்பட்ட அவசரசட்டத்தை முட்டாள் தனமானது என விமர்சித்து, அதை கிழித்தெறிய வேண்டும் என்கிறார். முகஸ்துதி பாடும் காங்கிரஸ் கட்சியினர் அந்த நொடியிலேயே தங்கள் மனதை, பச்சோந்தி போல் மாற்றிக் கொள்கின்றனர். இளைய தலைவருக்கான ஜால்ரா ஓசை உச்சகட்டத்தை எட்டுகிறது. ஏன் இவ்வாறு செய்யப்பட்டது? எந்த சூழ்நிலையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது என்றெல்லாம் எவரும் கவலைப்படவில்லை. அந்த அவசர சட்டம், காங்கிரசின் உயர்மட்ட குழுவால் ஒப்புதல் பெறப்பட்டு, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவராலும் ஏற்கப்பட்ட ஒன்று. இதையெல்லாம் நன்கு அறிந்த ராகுல், அப்போது கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததால், அந்த அவசர சட்டத்தை அவரும் ஆதரிப்பதாகவே கருதப்பட்டது.

    அப்படி இருக்கும்போது ராகுல் தாமதமாக எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்? அந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி தயக்கம் காட்டியதும், அதில் கையெழுத்திடக் கூடாதென ஜனாதிபதியை எதிர்கட்சிகள் வற்புறுத்தியதும், மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால பாமர மனிதனின் இத்தகைய எண்ணங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை.


    நாடு விடுதலை பெறுமா?

    மகாத்மா காந்தி, அடிமை மனப்போக்கிலிருந்து நாட்டை மீட்டு, கவுரவமான உயர் நிலையும் சுதந்திரமும் பெற உதவினார். 2014 லோக்சபா தேர்தலில் எத்தகைய முடிவு ஏற்படும் என்று இப்போது கூற முடியாது; இருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த போலி மதச்சார்பின்மை மற்றும் பிரபுத்துவ ஜனநாயக முறையிலிருந்து நாட்டை விடுவிப்பார்கள் என நம்புவோமாக.


    நன்றி ,
    தினமலர்  நாளிதழுக்கு ,



    என்றும் அன்புடன்,
    பாலசுப்ரமணியன்.சி




     

    Tuesday, November 26, 2013

    ஒரு இனிய பயண அனுபவம்

    நண்பர்களுக்கு இனிய வணக்கம் ,

    இந்த நாள் இனிய நாள்.

    ஒரு நாள் நாங்கள் பார்த்த ஒரு உடல் ஊனமுற்ற மனிதனை பற்றியும் அந்த மனிதனை அணுகிய மனித மிருகங்களை பற்றிய பதிவு இது ,

    சென்ற வாரத்தில் ஒரு நாள் எங்கள் பணி விசயமாக கோயம்பத்தூர்   நகரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் அறை நண்பர் ராஜீவும் பொள்ளாச்சிக்கு  இரண்டு\
    சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம் அப்போது கிணத்துகடவு  தாண்டி சென்று கொண்டிருக்கும் பொது நண்பர் ராஜீவ் ஒரு காபி அருந்திவிட்டு நம்
    பயணத்தை தொடரலாம் என்று கூறியதால் சாலை ஓரத்தில் பிரபலமான காபி கடைக்கு சென்றோம் காலை நேரம் என்பதால் கடையில் கூட்டம் எதுவும் இன்றி காலியாக
    தான் இருந்தது அந்த கடையில் காபி தவிர  வேறு எதுவும் கிடையாது என்பதால் நானும்
    நண்பருடன் வேண்டா  வெறுப்பாக கடையில் சென்று அமாந்தோம் நண்பர் காபி ஆர்டர் செய்தார் , பின்னர் இருவரும் பேசிக்கொண்டே காபி  அருந்த தொடங்கினோம் , நான் கடையில் சாலையை பார்க்கும் வண்ணம் அமர்ந்து இருந்தேன் .

    அந்த நேரத்தில் அந்த நெடுஞ்சாலையில் ஒரு பிச்சைக்கார உருவம் கொண்ட மனிதர் சாலையை கஷ்டப்பட்டு கடந்து நாங்கள் அமர்ந்து இருந்த கடையை நோக்கி வந்தார், அவரின் இரண்டு கால்களும் வளைந்து மிகவும் பரிதாபமாக இருந்தார் அவரின் இரண்டு கா ல்களும் போலியோ  ஏதோ ஒரு வினோதமான எலும்பு நோய் என்று பார்த்த நேரத்தில் உணர முடிந்தது , அவர் கையில் ஒரு அலுமினிய பாத்திரமும் இருந்தது,

    நாங்கள் இருவரும் பார்த்து பரிதாப பட்டு பேசிகொண்டோம் , அப்போது நண்பர் ராஜீவ் இவர் ஒரு பிச்சைகாரர் என்று கருதி அவருக்கு ஒரு பத்து ரூபாய் கொடுக்க கையில் எடுத்து  வைத்து இருந்தார் , அவர் எங்கள் அருகில் வந்து பேச தொடங்கினர் அபோது அவர் நான் நேற்று இரவு மதியம் சாப்பிட்டேன் பிறகு சாப்பிடவே இல்லை என்று கூறி தனக்கு பசிபதாகவும்  அதற்கு காபி வாங்கி போக வந்ததாக கூறி ஒரு காபி ஆர்டர்  செய்தார்.

    அந்த மனிதரை
    மனிதரை பரிகாசமாக பார்த்த அந்த கடையில் வேலை செய்யும் பெண்  இந்த மனிதரை பார்த்து பிச்சைகாரனுக்கு  எடுப்பது பிச்சை  இதில் காபி வேறயா என்று கூறி ஒரு கப்பில் கொண்டு வந்து ஊற்றினாள் , அந்த மனிதர் தனக்கு இன்னும் ஒரு காபி வேண்டும் என கூறவே அவள் மீண்டும் வேண்டா  வெறுப்பாக மீண்டும் கொண்டு வந்து ஊற்றினாள்  அளவு குறைவாக.

    அந்த மனிதரின் முகத்தில் சிறிது கூட  புன்னகை மறையவில்லை மாறாக அந்த மனிதர் யோசிக்காமல் இரண்டு காபிக்கு  உண்டான தொகை ரூபாய் 30 கொடுதுவித்து நடக்க தொடங்கினார் , அபோது மனதில் நினைத்து கொண்டேன் மனிதனின் உருவத்தை பார்த்து கேலியாக நினைக்க கூடாது என்று. அந்த மனிதர் ஊனமாக இருந்தாலும் மனது ஊனம் இல்லை மேலும் அவர் தோற்ற்றம் அப்படித்தானே தவிர உள்ளம் வெள்ளை, அந்த கடையில் வேலை வேலை செய்த பெண்ணுக்கு அவர அருவருப்பாக தெரிந்தாலும், அவரின் பணம் அப்படி தெரியவில்லை

    அந்த மனிதர் அந்த பெண்ணை செருப்பால் அடிக்காத  குறையை தன் நடத்தையால் செய்து விட்டு சென்று விட்டார்.

    இறுதியாக அவர் கூறியது தான் பிச்சை எடுபதில்லை என்று  கூறியதோடு தன்னால் முடிந்த வேலை செய்து வாழ்வாத கூறினார்

    நல்லவேளை நாங்களும் அவருக்கு 10 ரூபாய் கொடுத்து அவரை இழிவு செய்யவில்லை நண்பர் ராஜீவ் அந்த பணத்தை பாக்கெட்டில் போட்டுகொண்டு பொள்ளாச்சியை நோக்கி பயணமானோம் அந்த மனிதரின் நினைவுகளோடு .


    அதனால் கூற விளைவது யாதெனில் உடல் தான் ஊனமே தவிர அவர்களுக்கு மனதில் இல்லை, அனால்  நம்மில் பலர் உடல் தான் நலமே தவிர மணம்  ஊனம்தான்.

    நாம் சந்தித்த மிக அற்புத மனிதரில் அவரும்  ஒருவர்,


    இந்த பதிவை எழுத ஊக்கபடுத்திய நண்பர் ராஜீவுக்கும்  நன்றிகளுடன் 

    பாலசுப்ரமணியன்.சி 
    கோயம்புத்தூர்.




























     

    Tuesday, November 19, 2013

    கவிதைகள்;


     
     
     
     
     
     
     
    ன் மேல் விழுந்த
    மழைத்துளி
    என்னை கூப்பிட்டு
    கர்வத்தில்
    காதில் சொன்னது
    மெல்ல...

    கடுப்பாயிட்டேன்..!!

    நீ தொடாத
    இடங்களைக் கூட
    நான்
    தொட்டுவிட்டேனேன்று
    ...
     
     
     
    நீ பேசும் வார்த்தை
    உலகுக்கே புரியும் ...!!
    நீ பேசாத வார்த்தை
    உன்னை நேசிக்கும் எனக்கு
    மட்டுமே புரியும்...!!
     
     

    Sunday, November 17, 2013

    பீட்சா 2 வில்லா விமர்சனம்

    பீட்சா 2 வில்லா  விமர்சனம்:

    நடிகர்கள்

    அசோக் செல்வன்
    சஞ்சிதா ஷெட்டி
    இயக்கம் :தீபன் சக்கரவர்த்தி
    இசை :சந்தோஷ் நாராயணன்
    ஒளிபதிவு :தீபக் குமார்

    சமீப திரைப்படங்களில்  இது திகில் படம் என்றாலும்  ரத்தம் மற்றும் வன்முறை இல்லாத படம் கொடுத்த வகையில் நிச்சயம்  பாராட்ட வேண்டும்

    ஹீரோ ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர். அவரோட அப்பா ஒரு ஓவியர். சில பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாம் வரைஞ்சு ஒரு வீட்டுல வெச்சிருக்கார். அந்த ஓவியங்கள்ல எதிர் காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை விவரிப்பது போல் சில கலெக்ஷன்ஸ் இருக்கு. ஹீரோவோட அம்மா விபத்தில் இறப்பது போல் ஒரு ஓவியம். அந்த ஓவியம் வரைஞ்ச அடுத்த வருசம் அம்மா டெட். ஹீரோ நாவல் எழுதுனதுக்காக அவார்டு வாங்குவது போல் ஒரு ஓவியம் அதே போல் ஹீரோ அவார்டு வாங்கறார்.

    இந்த மாதிரி சில சம்பவங்கள் ஓவியங்கள்ல இருப்பது போலவே ஹீரோ வாழ்க்கைல நடக்குது. ஹீரோவோட அப்பா பிஸ்னெஸ்ல லாஸ் ஆகி கோமா ஸ்டேஜ்ல படுத்து செத்துடறாரு. ஹீரோவுக்கு தற்செயலாக வில்லா அப்டிங்கற வீட்டைப்பத்தி தகவல் கிடைக்குது. அது அவரோட அப்பா வாங்குன வீடுதான், ஆனா ஏதோ சில காரணங்களுக்காக அந்த வீட்டைப்பற்றின தகவல்களை மறைச்சுட்டாரு . அந்த வீட்டில் இதுக்கு முன்னால வாழ்ந்தவங்கள்ல ஒரு ஆள் ஒரு குழந்தையை நர பலி கொடுத்திருக்காரு. அதனால கூட இருக்கலாம்னு ஹீரோ நினைக்கறாரு.

    ஹீரோவோட அப்பா வரைஞ்ச ஓவியக்கலெக்ஷன்ல ஹீரோ சாவது போலவும், ஹீரோவோட லவ்வரை ஹீரோவே கொலை செய்வது போலவும் இருக்கு. ஹீரோ அதைத்தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றியா? தோல்வியா? என்பது க்ளைமாக்ஸ்.

    விஜய் சேதுபதி ஹீரோவா நடிச்ச பீட்சா செம ஹிட் ஆனதால், அதே ஃபார்முலாவில் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவுக்கு மாறுதலான த்ரில்லர் கதை கொண்ட படம். ஹீரோவா அசோக் செல்வன். கச்சிதமான நடிப்பு. அவர் ஏன் படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வர்றார்னு தெரியலை. அப்பப்ப ஜாலியா இருப்பது மாதிரி காட்டி இருக்கலாம்.

    ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி. ஹீரோவை விட அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர் . இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம். நாசர் ஹீரோவுக்கு அப்பா கேரக்டர். ஆனா அதிக வாய்ப்பில்லை. பின்னணி இசை பிரமாதம்

    படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களுக்கு திக் திக் என வரவழைக்க காரணம் சந்தோஷ் நாராயணன் இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும்தான்.

    பீட்சா பாணியில் திகிலாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீபன்.

    மொத்தத்தில் 'பீட்சா 2 வில்லா' திகிலூட்டும் தீனி.

    மொத்தத்தில் இந்த படம் A  சென்டர்களுக்கான  படம் Bமற்றும் C   சென்டர்களிலும்  படம் ஓடும் என்றாலும் பெரிய வசூல் எதிர் பார்க்ககூடாது  என்பதுதான் உண்மை .



    இது என்னுடைய பார்வையில் மட்டுமே எனவே உங்களின் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    என்றும் நேசமுடன் ,
    பாலசுப்ரமணியன்.சி
    கோயம்புத்தூர் .

                                        இந்த நாள் இனிய நாள் .




















     

    Saturday, November 16, 2013

    தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை: அமீர்கான்

    தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை: அமீர்கான்

    உலகமே ஆவலுடன்  எதிர்நோக்கிய  சச்சின்  கிரிக்கெட் வாழ்க்கை மும்பை வாங்கடே மைதானத்தில்  மிக பிரமாண்டமாக நிறைவு பெற்றது  அப்போது மும்பை மைதானத்தில் அமிர்கான் மற்றும் ராகுல்காந்தி மற்றும் பல்வேறு பிரபலங்கள் போட்டியை ரசித்தனர் அப்போது அமிர்கான்  நிருபர்களிடம் பேசிய அமீர் இந்த செய்தியை கூறினார்

    சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சச்சின் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கராக நடிக்க அமீர்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.அமீர்கான் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘லகான்’ இந்தி படத்தில் நடித்துள்ளார். எனவே சச்சின் தெண்டுல்கர் வேடத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்கின்றனர்.

    இதுகுறித்து அமீர்கான் கூறும்போது, நான் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகன். சச்சின் தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் நடிப்பேன். கதை பிடித்தால் ஏன் மறுக்க வேண்டும். நான் நடிப்பேன் என்று கூறினார்.

    மேலும் சச்சின் டெண்டுல்கருக்கு அவரின் இந்த மிக பெரிய சாதனையை பாராட்டி அவருக்கு இந்தியாவின் மிக பெரிய விருதான பாரத  ரத்னா  விருது வழங்கி சிற்பிக்க வேண்டும் என பல்வேறு மட்டங்களில் கோரிக்கை எழுந்துள்ளது .


    pizzaa  2 விமர்சனத்துடன் உங்களை மீண்டும் சந்திப்போம்

    வணக்கம் அன்பர்களே
    இந்த நாள் இனிய நாள்

    என்றும்  பிரியமுடன் ,
    பாலசுப்ரமணியன் .சி
    9965818701