Pages

Sunday, December 29, 2013

என்றென்றும் புன்னகை படம் ஒரு பார்வை

என்றென்றும்  புன்னகை  படம் ஒரு பார்வை :

இந்த படத்தின் விமர்சனங்களை நிறையவே படித்து இருப்பீர்கள் எனவே இங்கு இந்த படத்தில் என்னை கவர்ந்த காட்சிகளை இங்கு பதிவிடுகிறேன்

 இந்த படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி செந்தில் திரை அரங்கில் நண்பர்களுடன் பார்க்க சென்றேன்  முந்தின நாள் பிரியாணி படம் பாதிப்பு வேறு அதனால் அரை மனதுடன் அமர்ந்தேன்

நண்பன் படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள். இந்தப்படத்தில் ஜீவா, சந்தானம், வினய் மூவரும் நண்பர்கள் கிட்டத்தட்ட இதுவும் நட்பை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான்!

இந்தகதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் படமாக்க முடியுமோ? அத்தனைக்கு அத்தனை காமெடியாகவும், கலர்புல்லாவும், அதேநேரம் கமர்ஷியலாகவும் படமாக்கி என்றென்றும் புன்னகை படத்தை எக்குத்தப்பாக எகிற வைத்து இருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்!

கையில் மதுக்கோப்பை, கண்ணில் மதுபோதை, நக்கல் பேச்சு, நச் என்ற கோபம்... என வழக்கம் போலவே தன் பாணி நடிப்பில் இந்தப்படத்தையும் தூக்கி நிறுத்த முற்பட்டிருக்கிறார் கெளதம் பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகர் ஜீவா. இவரது அம்மா, அப்பா நாசரை விட்டு ஓடிப்போனவர்... என்று நண்பர்கள் கலாய்க்கும் போது அவர் படும் வேதனை, கோபம், ஏற்கும் சபதம் எல்லாம் அவரது முகத்தில் கலவையாக சேர்ந்து திரையில் எதிரொளிக்கும் சீன்கள் போதும்

கதைப்படி, ஹீரோ ஜீவாவிற்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. காதல் என்றாலே கடுப்பு! காரணம், அவரது அப்பாவை விட்டு எஸ் ஆன அவரது அம்மா! அதனால் காதல், கன்னியர் என்றாலே கடுப்பாகும் ஜீவாவுடன், சிறுவயது முதலே நட்பில் இருக்கும் சந்தானமும், வினய்யும், ஜீவாவுக்காக காதலிப்பது இல்லை, திருமணம் செய்து கொள்வதில்லை... எனும் உறுதியுடன் ஒரே படிப்பு, ஒரே குடிப்பு, ஒரே மாதிரி வேலை, ஒரே அலுவலகம், ஒரே படுக்கை... என நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை சலித்துப்போய் நண்பர்கள் சந்தானம், வினய் இருவரும் தங்கள் பெற்றோர் சொல்படி கல்யாணம் கட்டிக்கொண்டு இல்வாழ்க்கையில் இறங்க, விளம்பர பட இயக்குநரான ஜீவா தனிமையில் தவிக்கிறார்.

ஆனாலும் த்ரிஷா மேக்கப்  தாண்டியும்  முகத்தில் வயசு நன்றாக தெரிகிறது. ஆனாலும் நன்றாகத்தான் இருக்கிறார் நீண்ட நாளைக்கு பிறகு ஜீவாவிற்கு மற்றும் த்ரிஷாவிற்கு ஒரு நல்ல வெற்றி

அதே போல் படத்தின் இன்னொரு முக்கியமான பலம் இசை  வாழ்த்துக்கள் ஹாரிஸ் மற்றும் நன்றி நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல இசை உங்களிடம் இருந்து.

அஹமத்தின் எழுத்து, இயக்கத்தில் ஆரம்பகாட்சிகளில் இது ஏதோ ஆணுக்கு ஆண் எனும் கொச்சையான உறவை வலியுறுத்தும் ஹே படமோ! எனும் மாயை உடைத்தெறிந்து எல்லாம் காமெடிக்குத்தான் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவது பலம்!


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன் .சி
கோவை .
+91 9965818701

















 

1 comment:

Poems said...

http://acceptthehorrortruths.blogspot.in/